மும்பை புறநகர் பகுதியில் உள்ள வாய்க்கால் மீது அமைக்கபட்டிருந்த 6,000 கிலோ எடையுள்ள இரும்பு பாலத்தை திருடியதாக 4 பேரை மும்பை போலீசார் கைது செய்தனர். இத்தகவலை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார். மலாடில் (மேற்கு) 90 அடி நீளமுள்ள பாலம், மின்சார கேபிள்களை அங்கிருந்து திருப்பி விடுவதற்காக 'அதானி எலக்ட்ரிசிட்டி' என்ற மின் நிறுவனத்தால் கட்டப்பட்டது என்று பங்கூர் நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: வாய்க்காலில் நிரந்தர பாலம் கட்டப்பட்டு, சில மாதங்களுக்கு முன், அங்கிருந்த தற்காலிக பாலம், அப்பகுதியில் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. ஜூன் 26 அன்று தற்காலிக பாலம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து மின்வாரியத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாலம் கடந்த ஜூன் 6-ம் தேதி காணப்பட்டது தெரிய வந்தது.
பாலம் இருந்த இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை போலீஸார் ஸ்கேன் செய்து பார்த்த போது, ஜூன் 11ஆம் தேதி பாலம் நோக்கி ஒரு பெரிய வாகனம் செல்வதைக் கண்டதாக அந்த அதிகாரி கூறினார். பின்னர் அந்த வாகனத்தின் பதிவு எண்ணின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த ஆராம்பித்தனர்.
பாலத்தை வெட்டி, 6,000 கிலோ இரும்பை திருட, காஸ் கட்டிங் இயந்திரங்கள் வாகனத்தில் இருந்தன,'' என்றார். மேலும் விசாரணையில், பாலம் கட்ட ஒப்பந்தம் பெற்ற மின்வாரிய ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த வாரம் அந்த ஊழியரையும் அவரது மூன்று கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். திருடப்பட்ட பொருட்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் விசாரணையில், பாலம் கட்ட ஒப்பந்தம் பெற்ற நிறுவன ஊழியர் ஒருவரிடம் போலீசார் அழைத்துச் சென்றனர். கடந்த வாரம் அந்த ஊழியரையும் அவரது கூட்டாளிகள் மூவரையும் போலீசார் கைது செய்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.கைதான நால்வரில் ஒருவருக்குத்தான் அந்த இரும்புப்பாலத்தைக் கட்டுவதற்கு அதானி நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அமர்நாத் பயணம் தொடங்கியது! பனிலிங்க சிவனை 62 நாட்கள் தரிசிக்கலாம்
கடந்த ஆண்டு நடந்த இதே போன்ற சம்பவத்தில் பிஹாரில் நடந்தது. பிஹாரில் பாட்னா அருகே உள்ள அமியவார் கிராமத்தில் ஆற்றின் குறுக்கே 1972 ஆம் ஆண்டு இரும்பு பாலம் ஒன்று கட்டப்பட்ட பாலம் இதே போல் திருடு போனது. பயன்பாட்டில் இல்லாத 500 டன் எடை கொண்ட அந்த பாலம் சேதம் அடைந்த நிலையில், இந்தப் பாலத்தை இடிக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து நீர்ப்பாசனத் துறையிடம் கோரிக்கை வைத்து இருந்தனர். இதைஅறிந்த மர்ம கும்பல் ஒன்று பாலத்தை திருட திட்டம் தீட்டியது. தங்களை அரசு அதிகாரிகள் என்று கூறி பாலத்தை வெட்டத் தொடங்கினர். பாலத்தை 2 நாட்கள் பொறுமையாக ஆர அமர்ந்து கேஸ் கட்டர்கள், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பாலத்தை வெட்டி எடுத்து சென்றனர். இது தொடர்பாக கிராம மக்கள் அவர்களிடம் கேட்ட போது, நாங்கள் நீர்ப்பாசத்துறை அதிகாரிகள் என்றும் தெரிவித்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ