RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி இந்த முறையும் ரெப்போ விகிதங்களில் மாற்றங்களை செய்யாமல் முந்தைய விகிதங்களையே தொடர்வதாக அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) நிதிக் கொள்கைக் குழு (MPC) 2024 ஆம் ஆண்டின் முதல் பணவியல் கொள்கை கூட்டத்தை பிப்ரவரி 6, 2024 அன்று தொடங்கியது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் (Shaktikanta Das) தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகின்றது. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட எம்பிசி குழு, இன்று அதாவது பிப்ரவரி 8, 2024 அன்று தனது ஆய்வுகள் மற்றும் விவாதங்களை நிறைவு செய்யும். கொள்கை மறு ஆய்வுக் கூட்டதின் கடைசி நாளான இன்று, நாளின் தொடக்கத்திலேயே ரெப்போ விகிதங்களுக்கான அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பு வந்து விட்டது.
ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை
- இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆர்பிஐ (RBI) ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாகவே தொடர்வதாக அறிவித்தார்.
- இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரெப்போ விகிதம் அப்போதிருந்த 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
- அந்த நேரத்தில் உலகளாவிய வளர்ச்சியால் உந்தப்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெஞ்ச்மார்க் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.
நட்டின் பணவீக்கத்தை 4 சதவீதம் என்ற இலக்கில் கட்டுப்படுத்துவதில் எம்பிசி (MPC) உறுதியாக உள்ளதாக கூறிய ரிசர்வ் வங்கி ஆளுநர் (RBI Governor) சக்திகாந்த தாஸ், இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஆர்பிஐ பணவியல் கொள்கை கூட்டங்கள் எப்போதெல்லாம் நடக்கும்?
ரிசர்வ் வங்கி ஒரு ஆண்டில், 6 முறை, அதாவது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பணவியல் கொள்கை ஆய்வுக் கூட்டங்களை நடத்துகின்றது. இது தவிர இந்த ஆய்வுக் கூட்டங்கள் அல்லாத சந்திப்புகளும் அடிக்கடி நடக்கின்றன. அவசர நிலைகள், உடனடி தீர்வுகளின் தேவை ஆகிய சந்தர்ப்பங்களில் இப்படிப்பட்ட சந்திப்புகள் நடக்கின்றன.
மேலும் படிக்க | NPS Withdrawal Rules:பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்.!!
EMI இல் மாற்றம் வருமா?
ரிசர்வ் வங்கி தொடர்ந்து இன்று ஆறாவது முறையாக ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் பழைய விகிதத்திலேயே தொடர்ந்துள்ளது. அதாவது, ரெப்போ விகிதம் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய நிலையிலேயே உள்ளது. இதனால், பல்வேறு கடன்களை வாங்கியவர்களுக்கு இஎம்ஐ -இல் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது. EMI அளவு கூடவும் கூடாது, குறையவும் குறையாது.
Repo Rate என்றால் என்ன?
வங்கிகளுக்கு மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் விகிதம் ரெப்போ ரேட் (Repo Rate) எனப்படும். ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டியும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடன்களின் விகிதமும் அதிகரிக்கின்றது. இதன் விளைவு கார் கடன், வீட்டுக் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதங்களில் தெரியும். ரெப்போ விகிதத்தில் செய்யப்படும் மாற்றங்கள் கடன் வாங்கியுள்ள வங்கி வாடிக்கையாளர்களின் இஎம்ஐ மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும் படிக்க | குறைந்த முதலீடு…நிறைந்த வருமானம்..வீட்டிலிருந்தே ‘இந்த’ தொழில் செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ