புதாதித்ய யோகத்தால் திடீர் பணவரவைப் பெறப்போகும் 3 ராசிகள்! சூரிய பெயர்ச்சியால் யோகம்

Budhaditya Yogam on Pongal: சூரியனுடன், புதன் சேர்வதால் ஏற்படும் யோகம் புதாதித்ய யோகம் எனப்படுகிறது. ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களும் இணைந்திருந்தால், புத - ஆதித்ய யோகம் ஏற்படும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 9, 2023, 05:09 PM IST
  • சூரியனுடன், புதன் சேர்வதால் புதாதித்ய யோகம் ஏற்படும்
  • ஜாதகத்தில் புதனும் சூரியனும் இணைந்தால் சில ராசிகளுக்கு நன்மை
  • புத - ஆதித்ய யோகம் யாருக்கெல்லாம் நன்மையைத் தரும்
புதாதித்ய யோகத்தால் திடீர் பணவரவைப் பெறப்போகும் 3 ராசிகள்! சூரிய பெயர்ச்சியால் யோகம் title=

Budhaditya Rajyog On Happy Pongal 2023: நவக்கிரகங்களில், ஆத்மகாரகனான சூரியனுடன், புதன் சேர்வதால் ஏற்படும் யோகம் புதாதித்ய யோகம் எனப்படுகிறது. ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களும் இணைந்திருந்தால், புத - ஆதித்ய யோகம் ஏற்படும். மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி போன்ற ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு கிரகங்களும் இணைந்திருந்தால், புத - ஆதித்ய யோகத்தின் நற்பலன்கள் கிடைக்கும்.  

புதனின் ராசி மாற்றங்கள்

தற்போது, வக்ர நிலையில் தனுசு ராசியில் உள்ள புதன் பகவான், ஜனவரி 02 ஆம் தேதி அஸ்தமனமாகினார்.  அஸ்தமன நிலையில் 2023 ஜனவரி 13 ஆம் தேதி வரை இருக்கப் போகும் புதனால், தற்போது சிலருக்கு நன்மைகள் கிடைக்கலாம். ஆனால், ஜனவரி 18ஆம் தேதி தனுசு ராசியில் மீண்டும் புதன் சென்று, அங்கும் சில நாட்கள் இருந்துவிட்டு, பிப்ரவரி 7ம் தேதி மகர ராசிக்கு செல்வார் புத பகவான்.

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும்

நிலை மாறும் புதனின் தாக்கம்

இப்படி நிலை மாறும் புதனின் பெயர்ச்சிகளின் தாக்கம் அனைவரையும் பாதித்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மை ஏற்படும். 

துலாம்:  விருச்சிக ராசியில் புதன் மற்றும் சூரியன் இணைவதால் உருவாகும் புதாதித்ய யோகம், துலாம் ராசியினருக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த லக்னத்தின் இரண்டாம் வீட்டில், பேச்சாற்றல் மற்றும் செல்வ வளம் ஆகியவை அமையும். திடீரென பணம் வந்துக் கொட்ட்டும்.

தொழிலில் வெற்றியைப் பெறுவீர்கள். சூரியனின் செல்வாக்கு துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் வெற்றியைத் தரும். அதேபோல், வாக்குக்காரகரான புதனின் அருளால்,  துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். கல்வி, ஊடகம், சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல எதிர்காலத்திற்கான அஸ்திவாரம் அமையும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு, மங்கள யோகமான புதாதித்ய யோகமானது, தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றியைத் தரும். பல்வேறு பக்கதில் இருந்து பணம் வந்துக் குவியும். தொழிலில் நல்ல ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணத்தை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் இந்த புத்தாதித்ய யோகம் என்பது மகிழ்ச்சியைத் தரும்.  

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

மீனம்
புத்தாதித்ய ராஜயோகம் மீனத்தின் ஒன்பதாம் வீட்டில் உருவாகும், இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு நாட்டுத் தொடர்புக்கான வீடாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில், நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும்.

தொழில் அலல்து பணியின் நிமித்தம் நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். தற்போது செய்து வரும் வேலையில் பதவி உயர்வு பெறலாம். சொத்து தொடர்பான விஷயங்களில் பிரச்னை ஏதேனும் இருந்தால், அதற்கும் விரைவில் தீர்வு கிடைக்கும். சூரியனின் தாக்கத்தால் சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும், அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பதவி கிடைக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதனின் திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி முதல் பண மழை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News