இவையெல்லாம் வீட்டு பூஜை அறையில் இருக்ககூடாது! சச்சரவுகள் உருவாகும்

வீட்டில் பூஜை அறையில் வைக்கக்கூடாத சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை கடைபிடிக்காவிட்டால் வீட்டில் சண்டை சச்சரவுகள் உருவாகும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 03:34 PM IST
  • வீட்டு பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?
  • பூஜை அறையின் வாஸ்து டிப்ஸ்
  • மகிழ்ச்சி பெருகி நலமுடன் வாழ வேண்டும்
இவையெல்லாம் வீட்டு பூஜை அறையில் இருக்ககூடாது! சச்சரவுகள் உருவாகும் title=

வீடுகளில் வழிபாடு நடத்துவதற்கும் சில முறைகள் உள்ளன. அவற்றை பற்றி வேதங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டில் பூஜை செய்யும் இடம் சரியான திசையில் அமைந்தால் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். மாறாக, தவறான திசையில் வீட்டின் வழிபாட்டு அறை இருந்தால், பல வகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது தவிர, மகிழ்ச்சியும் அமைதியும் வாழ்க்கையில் இருந்து விலகிச் சென்றுவிடும்.அதனால் வீட்டில் வழிபாடு அறை எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். 

சிலை

வழிபாட்டு அறையில் விநாயகர் சிலை வைப்பது மங்களகரமானதாக கருதப்பட்டாலும், 3 விநாயகர் சிலைகள் இருக்கக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட சிலைகள் இருந்து, அவற்றை வழிபட்டு வந்தால் வீட்டில் அமைதியின்மை ஏற்படும். அதனால் 2 விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுங்கள். மேலும் வீட்டில் வைக்கப்படும் சிலைகள் மிகப்பெரிய அளவில் இருத்தல் கூடாது. குறிப்பாக சிவலிங்கம் இருந்தால், கை கட்டைவிரல் அளவை விட பெரியதாக இருக்கக்கூடாது.  

மேலும் படிக்க | சனி பகவானின் அருளை பரிபூரணமாக என்றும் பெறும் ‘3’ ராசிக்காரர்கள்..!!

சங்கு வழிபாடு

கோவில்களில் சங்கு வழிபாடுகள் நடைபெறுவதை பார்த்திருப்பீர்கள். 108 அல்லது 1008 சங்குகள் வைத்து பிரம்மாண்டமாக வழிபாடு நடத்தப்படும். ஆனால், வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்குகளை வைத்து வழிபடக்கூடாது. ஒன்றுக்கும் மேற்பட்ட சங்குகள் இருந்தால், அருகில் இருக்கும் புனித நதிகளில் அவற்றை விட்டுவிட வேண்டும். 

வழிபாடு

வழிபாடு நடைபெறும் போது ஆரத்தி விளக்கில் போதுமான நெய் அல்லது எண்ணெய் இருப்பதை உறுதி செய்யுங்கள். இடையில் அவை அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வழிபாடு நடைபெறும்போது விளக்கு அணைந்தால், அதற்கு பலன் கிட்டாது. தெய்வங்களுக்கு சுத்தமான பூக்களை பயன்டுத்துங்கள். சாஸ்திரங்களின்படி, 11 நாட்களுக்கு மேலான துளசி மாலையை சாமிக்கு இடக்கூடாது. எப்போது துளசி மாலை போட்டாலும் தண்ணீர் தெளித்து அதன்பின்னர் கடவுளுக்கு இட வேண்டும்.

மேலும் படிக்க | புதனின் அருளால் வேலை-வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெற இருக்கும் ராசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News