தனது புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய யமஹா! என்ன என்ன சிறப்பம்சங்கள்?

Yamaha Ray ZR: யமஹாவின் 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் ரேஞ்ச் யமஹாவின் புளூடூத் இயக்கப்பட்ட ஒய்-கனெக்ட் ஆப்  மூலம் இயக்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 21, 2023, 08:25 AM IST
  • ஸ்கூட்டரின் புதிய எஞ்சின் இப்போது OBD2 உடன் இணைந்துள்ளது.
  • 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைக்கப்பட்டுள்ளது.
  • யமஹா 125 ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் பல புதிய வண்ணங்களில் கிடைக்கிறது.
தனது புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய யமஹா! என்ன என்ன சிறப்பம்சங்கள்? title=

Yamaha Ray ZR: இந்தியாவில் யமஹா நிறுவனம் Fascino 125 Fi Hybrid, Ray ZR 125 Fi Hybrid மற்றும் Ray ZR Street Rally 125 Fi ஹைப்ரிட் உள்ளிட்ட 125 சிசி ஸ்கூட்டர் வரிசையின் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. யமஹாவின் 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் ரேஞ்சின் 2023 வெர்ஷன் இப்போது E20 எரிபொருள் எஞ்சினை கொண்டு வருகிறது.  இந்த புதிய எஞ்சின் இப்போது OBD2 உடன் இணைந்துள்ளது, இது இன்ஜினின் சிறப்பான செயல்திறன் போன்றவற்றின் டேட்டாக்களை கண்காணிக்க உதவுகிறது.  இந்த 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் ரேஞ்ச் யமஹாவின் புளூடூத் இயக்கப்பட்ட ஒய்-கனெக்ட் ஆப்  மூலம் இயக்கப்படுகிறது, இது வாகனம் ஓட்டுபவரின் தொலைபேசிக்கு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டை வழங்குகிறது. 

மேலும் படிக்க | டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் ‘இந்த’ வாகனங்களுக்கு எண்ட்ரி இல்லை: NHAI

yahama

மேலும் யமஹா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒய்-கனெக்ட் ஆப், எரிபொருள் நுகர்வு டிராக்கர், மெயின்டனன்ஸ் ரெக்கமமெண்டேஷன்ஸ், கடைசியாக பார்க்கிங் செய்யப்பட்ட இடம், ரெவ்ஸ் டாஷ்போர்டு, ரைடர் ரேங்கிங் போன்ற பல அம்சங்களை வழங்குகிறது.  யமஹா 125 ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் இப்போது பல புதிய வண்ணங்களில் கிடைக்கிறது, Fascino 125 Fi ஹைப்ரிட் & ரே ZR 125 Fi ஹைப்ரிட் மாடலின் டிஸ்க் வேரியண்ட் புதிய டார்க் மேட் ப்ளூ நிறத்திலும் கிடைக்கும் மற்றும் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி 125 Fi ஹைப்ரிட் மேட் பிளாக் & லைட் கிரே வெர்மில்லியன் ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கும்.  தற்போது ஸ்கூட்டர்கள் மேட் ரெட், மெட்டாலிக் பிளாக் மற்றும் சியான் ப்ளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
 
யமஹாவின் புதிய 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் ரேஞ்ச் BS-VI OBD2 & E-20 குளிரூட்டப்பட்ட, எரிபொருள் உட்செலுத்தப்பட்ட (FI), 125 சிசி ப்ளூ கோர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.  இந்த ஹைப்ரிட் இன்ஜினில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) சிஸ்டம் உள்ளது, இது வாகனம் ஓட்டுபவருக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது.

மேலும் படிக்க | மலிவான விலையில் ஐபோன் 11! ரூ. 20000 வரை அதிரடி தள்ளுபடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News