கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லுங்க - சிம்பு வேண்டுகோள்

கூல் சுரேஷ் வேற லெவல். அவருக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 15, 2022, 12:07 PM IST
  • வெந்து தணிந்தது காடு படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு
  • கூல் சுரேஷ் குறித்து சிம்பு பேசியிருக்கிறார்
  • அவருக்கு சிம்பு நன்றியும் தெரிவித்தார்
 கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லுங்க - சிம்பு வேண்டுகோள் title=

சினிமாவில் பல பிரச்னைகளை சந்தித்த சிம்புவுக்கு மிகப்பெரிய பலமே அவரது ரசிகர்கள். அப்படிப்பட்ட ரசிகர்களில் ஒருவர் கூல் சுரேஷ். சிம்புவின் எந்தப் படம் வெளியானாலும் ப்ரோமோஷன் செய்த அவர் ஒருகட்டத்தில் யார் பாடம் வந்தாலும், “வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு” என்றே தனது பேச்சை தொடங்கினார்.

அவரது இந்தப் பேச்சு ஆரம்பத்தில் கேலி செய்யப்பட்டாலும் காலப்போக்கில் ரசிக்கப்பட்டது. அதேசமயம் அவரது இந்தப் பேச்சு விமர்சனத்தையும் எழுப்பியிருக்கிறது. அதற்கேற்றார்போல் கூல் சுரேஷுக்கு தேசிய முன்னேற்ற கழக தலைவர் ஜி.ஜி.சிவா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ஆடியோவும் வெளியானது.

Cool Suresh

இந்தச் சூழலில் வெந்து தணிந்தது காடு படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ரசிகர்கள் முதல் நடிகர்கள்வரை பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.

 

வெந்து தணிந்தது காடு படத்தை பார்க்க திரையரங்குக்கு வந்த கூல் சுரேஷுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். 

 

இந்நிலையில் கூல் சுரேஷ் குறித்து இதுவரை பெரிதாக பேசாத சிம்பு தற்போது பேசியிருக்கிறார். ட்விட்டரில் உரையாடிய அவர், எல்லோரும் மனசார கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லிதான் ஆகவேண்டும். அவர் வேற லெவல். படத்துக்கு அவர் தனி புரொமோஷன் செய்துள்ளார். நன்றி கூல் சுரேஷ்” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க | எங்கும் பாஸிட்டிவ் விமர்சனங்கள் - சிம்புவுக்கு சூர்யா பாராட்டு

மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News