அவரைத்தவிர எனக்கு வேறு யாருமில்லை: செல் முருகன்!

அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை மறைந்த நடிகர் விவேக்கின் உற்ற நண்பரும், மேனேஜருமான செல் முருகன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

Written by - ZEE Bureau | Last Updated : Apr 19, 2021, 10:50 PM IST
அவரைத்தவிர எனக்கு வேறு யாருமில்லை: செல் முருகன்!

கடந்த 17-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் காலமானார். தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் இன்று நம்முடன் இல்லை. திரையுலக பிரபலங்கள் உட்பட பலர், அதிர்ச்சியையும் வேதனையையும் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விவேக் (Vivekh) மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் விருதுகள் மற்றும் பல்வேறு திரைப்பட விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். திரைப்படங்களில் நடிகர் விவேக் மற்றும் செல் முருகன் நட்புக் கூட்டணி மிகவும் பிரசித்தி பெற்றது. விவேக் நடித்த பல காமெடி காட்சிகளில் செல் முருகன் இடம்பெற்றுள்ளார். 

இந்நிலையில் விவேக்கின் மறைவுக்கு (Heart Attack) பிறகு அவரது மேலாளரும், நெருங்கிய நண்பருமான செல் முருகன் உருக்கமான பதிவை ட்விட்டர் இல் வெளியிட்டுள்ளார் அதில்.,

ALSO READ | நிழலும், நிஜத்திலும் சமூகத்தின் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக்: பிரதமர் மோடி

”ஓர் மரணம் என்ன செய்யும் சிலர் ப்ரொபைலில் கறுப்பு வைப்பார்கள். சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள். சிலர் RIP-யுடன் கடந்து போவார்கள். சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள் சிலர் கண்ணீருடன் கடந்து கொள்வார்கள். ஆனால், உண்மையான ஜீவன் என் உயிர் தோழன் என் முருகனை விட்டு விட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே. இங்கே எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள் இனி என் முருகனுக்கு யார்? துணை. விடை இல்லாமல் விரத்தியில் கேட்கிறேன். இனி அவனுக்கு யார் துணை? யார் துணை? யார் துணை?” என பதிவிட்டுள்ளார்.

 

 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News