அந்நிய நாட்டில் புதிய ரசிகரைப் பிடித்தார் மகேஷ் பாபு!

தெலுங்கு திரையுலகில் தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் மகேஷ் பாபு, இவர் சமீபத்தில் தமிழில் ஸ்பைடர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Last Updated : May 27, 2018, 01:45 PM IST
அந்நிய நாட்டில் புதிய ரசிகரைப் பிடித்தார் மகேஷ் பாபு! title=

தெலுங்கு திரையுலகில் தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் மகேஷ் பாபு, இவர் சமீபத்தில் தமிழில் ஸ்பைடர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

கடந்த மே 25 அன்று நடைப்பெற்ற IPL குவாளிப்பையர் 2 போட்டியில் வெற்றிப்பெற்ற ஐதராபாத் அணியை பாராட்டும் விதத்திலும், அணியில் சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானை பாராட்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில்...

Take a bow @rashidkhan_19... Whatta match by @SunRisers Can't wait for Sunday!!! Congratulations to the whole team. Go #OrangeArmy #SRH என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரஷித் கானும்... மிக்க நன்றி, உங்கள் படத்திற்காக முனைப்புடன் காத்திருக்கின்றேன் என பதிவிட்டு இருந்தார்.

ஆப்பாகினிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர், இந்திய திரையுலக நடிகரின் படத்திற்காக காத்திருப்பதாக பதிவிட்டு இருப்பது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான பாரத் அனே நானு என்னும் திரைப்படம் பாக்ஸ் ஆப்பிஸ் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது அடுத்தப் படமான "ஜன கன மன’ விரைவில் வெளிவர காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News