ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிக சம்பளம் வாங்கும் அனிருத்!! ஒரு படத்திற்கு இவ்வளவா?

Anirudh Ravichander Salary Per Movie : தமிழ் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் யார் தெரியுமா? அவர் குறித்து இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 29, 2024, 08:55 PM IST
  • அதிக சம்பளம் வாங்கும் டாப் 3 தமிழ் இசையமைப்பாளர்கள்
  • முதல் இடத்தில் இருக்கும் அனிருத்!
  • எவ்வளவு சம்பளம் தெரியுமா?
ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிக சம்பளம் வாங்கும் அனிருத்!! ஒரு படத்திற்கு இவ்வளவா?  title=

Anirudh Ravichander Salary Per Movie : தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஒரு படம் உருவாகிறது என்றால் அதில் நடிக்கும் முன்னணி நடிகர்தான் அதிகமான சம்பளம் வாங்குவார் என கூறப்படுகிறது. இதற்கு காரணம், அவர்கள்தான் படம் முழுக்க வருவார். இதையடுத்து அதிக சம்பளம் வாங்குவர், இயக்குநர். அடுத்து அதிக சம்பளம், தயாரிப்பாளர்கள் மற்றும் துணை இயக்குநர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இவர்கள் அல்லாமல் அதிக சம்பளம் வாங்குபவர்கள்தான், இசையமைப்பாளர்கள். 

தமிழ் இசையமைப்பாளர்கள்:

தமிழ் திரையுலகு, பல ஜாம்பவான் இசையமைப்பாளர்களை உருவாக்கி இருக்கிறது. இசைஞானியில் ஆரம்பித்து, ஏ.ஆர்.ரஹ்மான் வரை பலர் உலக படங்களுக்கும் இசையமைத்திருக்கின்றனர். இப்பாேது, சிகரம் தொட்டு வரும் இவர்களுக்கு அடித்தளமாக இருந்ததே கோலிவுட்தான். 

யுவன் சங்கர் ராஜா:

அதிக சம்பளம் வாங்கும் தமிழ் இசையமைப்பாளர்களின் பட்டியலில் இளையராஜாவின் இளைய மகன், யுவன் சங்கர் ராஜா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இசை குடும்பத்தில் இருந்து வந்ததாலோ என்னவோ, இவருக்கு இளம் வயதில் இருந்தே இசை ஆர்வம் அதிகமாக இருந்ததால், அதில் இப்போது வரை சிறந்து விளங்குபவராக இருக்கிறார். 

Yuvan shankar Raja

இவர் வாய்ஸில் ஏதோ ஒரு ஈரம் இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மானே பல மேடைகளில் பேசியிருக்கிறார். யுவனை பலர் போதை பொருள் சப்ளையர் என்று கூட கூறுவர். காரணம், இவரது பாடல்கள் அவ்வளவு போதையாக இருக்கிறதாம். இப்போது வரும் இவரின் புதிய பாடல்கள் கடும் விமர்சனங்களுக்கு உண்டானாலும், இவர் இக்காலத்தில் அனைவரது ப்ளே லிஸ்டையும் ஆட்டிவைத்தவர் இவர். யுவன், ஒரு படத்திற்கு 2 முதல் 5 கோடி வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கிய முன்னணி நடிகை! யார் தெரியுமா?

ஏ.ஆர்.ரஹ்மான்:

50களில், 40களில் இருக்கும் பலர் எப்படி “ராஜா ராஜாதான்..” என்று இளையராஜாவை பார்த்து வியந்து பேசுகின்றனரோ, அதே போல “பெரிய பாய் பெரிய பாய்தான்..” என்று ஏ.ஆர்.ரஹ்மானை பார்த்து அவரது ரசிகர்கள் கூறுவதுண்டு. ஆஸ்கர் நாயகனுக்கு, தமிழில் மட்டுமல்ல இந்திய அளவில் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர்.

AR Rahman

சமீபத்தில் இவர் இசையமைத்த ராயன் படத்தின் பாடல்கள் பெரிய ஹிட் அடித்தது. இவர் இசையமைப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த காலத்தில், இளையராஜா vs ஏ.ஆர்.ரஹ்மான் என்ற போட்டி இருந்தது, பின்னர் வித்யாசாகர் vs ஏ.ஆர்.ரஹ்மான், தேவா vs ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா vs ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் vs ஏ.ஆர்.ரஹ்மான் என மாறிக்கொண்டே இருக்கிறது. எதிரில் இருக்கும் இசையமைப்பாளர்களின் பெயர் மாறுகிறதே தவிர, ரஹ்மானின் பெயர் நிலைத்து நின்று இருக்கிறது. இவர், ஒரு படத்திற்கு சுமார் 8 கோடி வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. 

அனிருத்:

2கே கிட்ஸ் மட்டுமல்ல, பல வயதானவர்களையும் எழுந்து ஆட்டம் போட வைக்கிறது அனிருத்தின் பாடல்கள். ஒரு படத்தில் ஒரு பாடல் ஹிட் ஆனா பரவால்ல..எல்லா பாட்டும் எப்படி ஹிட் ஆகும்? என்று கேட்க வைக்கிறது அனிருத்தின் பாடல்கள்.

Anirudh Ravichander

17 வயதில் 3 படத்தின் ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் பிரபலமாவதற்கு இவரும் ஒரு காரணம். இன்று பான் இந்திய அளவில் வளர்ந்த இசையமைப்பாளராக இருக்கிறார். இவர்,ஒரு படத்திற்கு சுமார் 8 கோடி வரை சம்பளமாக பெருவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | நயன்தாரா-த்ரிஷாவை விட அதிக சம்பளம் வாங்கும் புது நடிகை! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News