Puducherry Schools Summer Vacation: நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெப்பம் அதன் தீவிர வடிவத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏப்ரல் 29 முதல் ஜூன் 5 வரை மூடப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஜூன் 6 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்.
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை கூறியதாவது..
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குனரால் வெளியிடப்பட்ட தீவிர வெப்பம், வெப்ப அலைக்கான பொது சுகாதார ஆலோசனையின் தொடர்ச்சியாக அனைத்து அரசு பள்ளிகளுக்கும், தனியார், சிபிஎஸ்சி பள்ளிகளுக்கும் கோடை விடுமுறைகள் 29.4.2024 ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோடை விடுமுறை முடிந்து 06.06.2024 ஆம் தேதி அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் 6 முதல் பள்ளிகள் திறக்கப்படும்.
மே 1 முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே 29 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏப்ரல் 29 முதல் மே 2 வரை மாநிலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரியாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை
புதுச்சேரி தவிர, பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்துள்ளது. இது தவிர ஜார்கண்ட் மற்றும் உ.பி.யின் சில பகுதிகளில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை -வானிலை ஆய்வு மையம்
ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை எச்சரிக்கையை IMD வெளியிட்டுள்ளது. இதுதவிர, ஒடிசா, பீகார், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை எச்சரிக்கை
அதேநேரத்தில் வடமேற்கு இந்தியாவில் ஏப்ரல் 26 முதல் 28 வரை பலத்த காற்றுடன் கூடிய மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், இமாச்சல், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் ஆலங்கட்டி மழை, புயல் மற்றும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை, இடி, மின்னல் எச்சரிக்கை
இது தவிர வடகிழக்கு இந்தியாவில் ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பலத்த மழை, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க - வானிலை அறிக்கை... இந்தியாவில் ‘இந்த’ மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ