செவ்வாய் பெயர்ச்சி: இந்த 2 ராசிகளுக்கு கிடைக்கும் அமோகமான பலன்கள்!!

Mars Transit: செவ்வாய் கிரகத்தின் அனைத்து விதமான மாற்றங்களும் மேஷம் மற்றும் விருச்சிக ராசியில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 29, 2022, 04:35 PM IST
  • மேஷ ராசிக்காரர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நேரம் இது.
  • அலுவலக வேலைக்குச் செல்ல விரும்பினாலும் அல்லது வியாபாரத்தை அதிகரிக்கச் செய்ய விரும்பினாலும் சிறு பயணங்கள் மூலம் இவற்றில் பலன் கிடைக்கும்.
  • சுற்றுப்பயணங்கள், பயணங்கள் செய்பவர்களுக்கு செவ்வாய் நல்ல லாபம் தரும் மனநிலையில் இருக்கிறார்.
செவ்வாய் பெயர்ச்சி: இந்த 2 ராசிகளுக்கு கிடைக்கும் அமோகமான பலன்கள்!! title=

செவ்வாய் பெயர்ச்சி 2022, ராசிகளின் இதன் தாக்கம்: செவ்வாய், கிரகங்களின் தளபதியாகும். மேலும் இது அதிக ஆற்றல் பெற்ற கிரகமாகவும் காணப்படுகின்றது. அக்டோபர் 16 ஆம் தேதி காலை 6.36 மணிக்கு செவ்வாய் கிரகம் தனது ராசியை மாற்றுகிறது. இதுவரை செவ்வாய் ரிஷப ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 16-க்கு பிறகு, செவ்வாய் தனது ராசியை மாற்றி மிதுன ராசியில் நுழையும். இங்கு செவ்வாய் கிரகம் 15 நாட்களுக்கு நேரான இயக்கத்தில் இருக்கும், பின்னர் அக்டோபர் 30 ஆம் தேதி செவ்வாய் கிரகம் பிற்போக்கு இயக்கத்தை, அதாவது வக்ர நகர்வை தொடங்கும். 

வரும் நவம்பர் 13 வரை மிதுன ராசியில் செவ்வாயின் அதிக செல்வாக்கு காணப்படும். இதன் பிறகு செவ்வாய் மீண்டும் ரிஷப ராசிக்கு மாறுவார். செவ்வாய் ராசி அதிபதியாக இருக்கும் இரு ராசிகளை பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம். இவை மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளாகும். செவ்வாய் கிரகத்தின் அனைத்து விதமான மாற்றங்களும் மேஷம் மற்றும் விருச்சிக ராசியில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இரு கிரகங்களுக்கு ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி  இந்த பதிவில் காணலாம். 

மேஷ ராசிக்காரர்கள் தைரியமாக இருக்க வேண்டும்

மேஷ லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு மிதுனத்தில் செவ்வாய் தங்குவதால் தைரியம் அதிகரிக்கும். மேஷ லக்னம் அல்லது மேஷ ராசி உள்ளவர்கள் தங்கள் பலத்தை அதிகரிக்க வேண்டும். அலுவலகத்தில் பிரசன்டேஷனை வழங்கும்போதோ, அல்லது நேர்காணலிலோ அதிக நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். கண்டிப்பாக செவ்வாய் கிரகத்தின் இந்த பரிமாற்றம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

குழந்தைகள் வெளிப்புற விளையாட்டுகளை விளையாட வேண்டும்

நாள் முழுவதும் மொபைலில் ஈடுபடும் அல்லது ஆன்லைன் கேம் விளையாடும் மேஷ ராசிக்கார குழந்தைகள் இப்போது கவனமாக இருக்க வேண்டும். இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தையை வெளிப்புற விளையாட்டுகளை விளையாட ஊக்குவிக்க வேண்டும். குறைந்தபட்சம் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். செவ்வாய் உங்களை உடல் ரீதியாக வலிமையாக்க முழுமையாக தயாராக உள்ளது.

மேலும் படிக்க | அக்டோபரில் கிரகங்களின் மிகப்பெரிய ராசி மாற்றம்: யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் 

சிறிய பயணங்களால் சாதகமான சூழல் உருவாகும்

மேஷ ராசிக்காரர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நேரம் இது. அலுவலக வேலைக்குச் செல்ல விரும்பினாலும் அல்லது வியாபாரத்தை அதிகரிக்கச் செய்ய விரும்பினாலும் சிறு பயணங்கள் மூலம் இவற்றில் பலன் கிடைக்கும். சுற்றுப்பயணங்கள், பயணங்கள் செய்பவர்களுக்கு செவ்வாய் நல்ல லாபம் தரும் மனநிலையில் இருக்கிறார்.

பிழைகளை திருத்திக்கொள்ளும் நேரம்

விருச்சிகம் லக்னம் மற்றும் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை மிக ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். செவ்வாய் விருச்சிக ராசியின் அதிபதி ஆவார். செவ்வாய் இப்போது மறுபரிசீலனை செய்யும் மனநிலையில் இருக்கிறார். ஆகையால், இந்த காலத்தில் உங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும். 

ஆராய்ச்சியாளர்களுக்கு நல்ல நேரம்

ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள விருச்சிகம் லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரம். விஷயத்தை ஆழமாக எடுத்துச் செல்ல செவ்வாயின் ஆற்றல் பெரிதும் உதவும். செறிவை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். நேரத்தை வீணடிக்கும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். நவம்பர் 13-ம் தேதி வரை சிந்தனை, ஆய்வு ஆராய்ச்சி என்று அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கலாம். அவை வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாகவும், வெற்றியின் வாசலுக்கு அழைத்துச் செல்லவும் உதவியாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தீபாவளி முதல் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அலை வீசும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News