கும்ப ராசிகளுக்கான வருட பலன்கள்... ஆண்டியாவதும் அரசனாவதும் உங்கள் கையில்!

கும்பம் ராசிபலன் 2023: கும்ப ராசியினர் சொந்தமாக  சிந்தித்து முடிவை எடுக்க வேண்டும் அப்போதுதான் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பீர்கள். கும்பம் ராசிகளுக்கு இந்த ஆண்டில் நிதி நிலை எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 2, 2023, 06:08 PM IST
  • உங்களை தவறாக வழிநடத்தும் நபர்களிடமிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும்.
  • நல்ல அறிவுள்ள, உங்கள் நலன் விரும்பி ஒருவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
  • குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் உங்களுக்கு பண விஷயத்தில் உதவுவார்கள்.
கும்ப ராசிகளுக்கான வருட பலன்கள்... ஆண்டியாவதும் அரசனாவதும் உங்கள் கையில்!

கும்பம் ராசிபலன் 2023: கும்ப ராசி 2023ம்  ஆண்டின் ஆரம்ப மாதங்களில், பண விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருப்பினும், ஆண்டின் மத்தியில் பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 22, 2023 அன்று மேஷ ராசியில் நுழையும் குரு உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் வீட்டில் அதாவது மீன ராசியில் இடம் பெயர்கிறார். நீங்கள் செய்யும் எந்த வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். 

2023ம் ஆண்டில் கும்ப ராசிகளின் பொருளாதார நிலை குறித்த கணிப்பு

பணம் தொடர்பான விஷயங்களில், உங்கள் மனதில் எந்தவிதமான முரண்பாடுகளும் வளர அனுமதிக்காதீர்கள், பணத்தை எங்கு முதலீடு செய்வது, எங்கு சேமிப்பது என்பதில் நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். பணம் சம்பாதிக்க, உங்கள் சாதுர்யமும், அனுபவமும் தான் பயன் தரும். வாழ்க்கையில் நேர்மறையாகவும் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்பினால் அல்லது புதிய தொழில் தொடங்க விரும்பினால், உங்களை தவறாக வழிநடத்தும் நபர்களிடமிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். நல்ல அறிவுள்ள, உங்கள் நலன் விரும்பி ஒருவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. 

பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை

புத்தாண்டில் பெரிய ரிஸ்க் எடுப்பது உங்கள் நிதி நிலையை ஆட்டம் காணச் செய்யும். பண விஷயங்களில் நீங்கள் கொஞ்சம் அசட்டையாக இருந்தால் பிரச்சனையில் அகப்படலாம். நிதி நிர்வாகம் சரியாக செய்யப்படவில்லை, பின்னர் நீங்கள் வருத்தப்படுவீர்கள். எனவே எச்சரிக்கை தேவை. 

கைக்கு வரும் பரப்பரை சொத்துக்கள்

ஆண்டின் நடுப்பகுதியில், உங்களுக்கு திடீரென்று பணம் கிடைக்கும். நிலுவையில் உள்ள குடும்ப வழக்குகள், சட்ட விவகாரங்கள் மற்றும் நிலுவையில் உள்ள சொத்துக்களின் வழக்கில் ஏற்பட்ட சாதகமான தீர்ப்பு மூலம் நீங்கள் பணத்தைப் பெறலாம். இந்த நேரத்தில் பரம்பரை சொத்துக்களையும் பெறலாம்.

மேலும் படிக்க | ஜனவரியில் நடக்க உள்ள 4 முக்கிய பெயர்ச்சிகள், இந்த ராசிகளுக்கு சிக்கல்

தொழிலில் வெற்றி கிடைக்கும்

கும்ப ராசிகளின் 2023ம் ஆண்டின் கணிப்பின் படி, உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்கள் தொழிலில் உங்களுக்கு உதவுவார். இதனால் செல்வமும் பெருகும். நீங்கள் ஒரு பெரிய முதலீடு செய்ய விரும்பினால், 2023  ஆகஸ்ட் மாதத்திலிருந்து அதற்கான பணிகளை செய்வது நன்மை பயக்கும் மற்றும் உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். ஏதேனும் சொத்து உங்கள் கையை விட்டுப் போயிருந்தால், இந்தக் காலக்கட்டத்தில் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.

சொத்து வாங்குவதில் கவனம் தேவை

இந்த ஆண்டு உங்கள் தனிப்பட்ட உறவுகள் மூலம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் உங்களுக்கு பண விஷயத்தில் உதவுவார்கள். மேலும் உங்கள் பட்ஜெட்டை நிர்வகிப்பதில் நீங்கள் கொஞ்சம் மன அழுத்தத்தை உணருவீர்கள். ஆனாலும் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள். நீங்கள் சொத்து வாங்க விரும்பினால், அதில் சில சட்டச் சிக்கல்களும் வரலாம். அவற்றைப் பற்றி நீங்கள் கவனமாக அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: சனி பெயர்ச்சியினால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க செய்ய வேண்டியவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News