மகாளயபட்சம் வரப்போகுது... தர்ப்பணம் தொடர்பான இந்த முக்கிய விஷயங்கள் தெரியுமா?

Pitru Paksha Darpanam : மகாளய பட்சம் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும் தர்ப்பணம் செய்யும் விதிமுறைகள் பற்றி பலருக்கும் சரியாக தெரிவதில்லை அவற்றைப் பற்றி சுருக்கமாக தெரிந்துக் கொள்வோம். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 8, 2024, 10:42 PM IST
  • பித்ரு தோஷம் ஏற்படாமல் இருக்க வழிகள்!
  • ஆண்டுக்கு 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய உகந்தவை
  • சந்நியாசம் வாங்கியவர்களுக்கும் தர்ப்பணம் செய்யலாம்
மகாளயபட்சம் வரப்போகுது... தர்ப்பணம் தொடர்பான இந்த முக்கிய விஷயங்கள் தெரியுமா? title=

இன்னும் சில நாட்களில் மஹாலய அமாவாசை வரவிருக்கிறது. வருடந்தோறும் 14 நாட்கள் மூத்தோர்களுக்கான கடமைகளை செய்யும் காலமான மகாளய அமாவசை தினத்தையும் சேர்த்தால், மகாளயபட்சம் மொத்தம் 15 நாட்கள் ஆகும், இந்த பதினைந்து நாட்களும் பித்ருக்களுக்கானவை. ஆவணி மாத பெளர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் துவங்கி, அடுத்து வரும் 14 நாட்கள் மற்றும் மஹாளய அமாவாசையில் செய்யும் தர்ப்பணம் மிகவும் விசேஷமானது.

தர்ப்பணம் செய்யும் விதிமுறைகள் பற்றி பலருக்கும் சரியாக தெரிவதில்லை அவற்றைப் பற்றி சுருக்கமாக தெரிந்துக் கொள்வோம். ஒரு ஆண்டில், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் 96. 14 நாட்கள் மான்வதி நாட்கள் என்றால், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு 12, 12 அமாவாசைகள், மஹாளய பட்சத்தில் மொத்தம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள் என இந்த 96 நாட்களில் செய்யப்படும் தர்ப்பணங்கள், பித்ருக்களுக்கு திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றன.

பொதுவாக, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளன்று, தர்ப்பண காரியங்கள் செய்து முடித்த பிறகே, தினசரி செய்ய வேண்டிய நித்ய பூஜைகளைச்செய்யவேண்டும். சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் அமாவாசை நாளன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்பது நம்பிக்கை, எனவே, அமாவாசை தர்ப்பணத்தை தவிர்த்துவிடக்கூடாது.

அமாவாசை திதியன்று பித்ருக்கள், தங்கள் சந்ததியினரின் வாசலில் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைவார்கள் என்பது நம்பிக்கை. எனவே பித்ருக்களின் பசியாற்றும் தர்ப்பணத்தை தவிர்க்காமால் செய்யவேண்டும்.  

மேலும் படிக்க | கோலாகலமாக கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியே உங்களை கோடீஸ்வரராக்கும்! எப்படி? இப்படித்தான்... 

குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமல் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிகவும் முக்கியம் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதேபோல, திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, திருவாரூருக்கு அருகில் உள்ள திலதர்ப்பணபுரி எனும் ஊரில் தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. ஏனென்றாஅல், ஸ்ரீராமரும் லட்சுமணரும் தங்கள் தந்தை தசரதருக்கு இந்த ஊரில் தான் தர்ப்பணம் செய்தனர் என்பது நம்பிக்கை. 

கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும்போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய் விடுவான் என்று கருதப்படுகிறது.அதேபோல, மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது முன்னோர்களுக்கு பலம் கொடுக்குக்ம். 

மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதும், ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் பலருக்கு தெரிவதில்லை. 

மேலும் படிக்க | மூதாதையர்களுக்கான கடமையை செய்யும் மகாளய காலம் ! பித்ரு பட்சம் திதி கொடுக்கும் நேரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News