வியாழக்கிழமையின் அதிர்ஷ்ட ராசிகள்... பலன்களும் பரிகாரங்களும்..!

Dinapalan: ஜூலை 18, வியாழன் அன்று, விருச்சிகத்திலிருந்து, தனுசு ராசிக்கு சந்திரன் பெயர்ச்சியாகிறார். இந்நிலையில், ஜூலை 18ம் தேதி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 17, 2024, 06:45 PM IST
  • ஜூலை 18ம் தேதி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும்?
  • வேலையில், தொழிலில், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அருமையான வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாழக்கிழமையின் அதிர்ஷ்ட ராசிகள்... பலன்களும் பரிகாரங்களும்..! title=

ஜூலை 18, வியாழன் அன்று, விருச்சிகத்திலிருந்து, தனுசு ராசிக்கு சந்திரன் பெயர்ச்சியாகிறார். ஆஷாட மாத சுக்ல பக்ஷத்தின் துவாதசி திதி என்பதாலும் இந்நாளில் சுக்ல யோகம், பிரம்மயோகம், ரவியோகம், கேட்டை நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைந்த சுபயோகம் நடைபெறுவதால் நாளைய தினத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஜூலை 18ம் தேதி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசிக்கான தினபலன்கள்

ஜூலை 18ஆம் தேதி மேஷ ராசிகளுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற்று நிம்மதியான வாழ்க்கை தொடங்கும். முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். சமூக தொடர்புகளை அதிகரிக்கும். திட்டங்கள் வெற்றியடைந்து வருமானம் அதிகரிக்கும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சகோதர சகோதரிகளின் உதவியையும் ஆதரவையும் பெறுவீர்கள்.

மேஷ ராசிக்கான வியாழன் பரிகாரம்: பணம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபட அரச இலையை கங்கை நீரால் கழுவி ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் ஶ்ரீம் நமஹ் என்ற மந்திரத்தை சந்தனத்தால் எழுதி பணப்பையில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் லட்சுமி தேவியின் உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தையும் வைத்துக் கொள்வதாலும் அதிர்ஷ்ட்டம் அதிகரிக்கும்.

கடக ராசிக்கான தினபலன்கள்

ஜூலை 18ஆம் தேதி கடக ராசிகளுக்கு லட்சியங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். செலவுகள் குறையும். திட்டங்களை நிறைவேற்றி, சாதிப்பதில் நீங்கள் வெற்றியடைவீர்கள், வேலையில், தொழிலில், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அருமையான வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையிலும், திருமண வாழ்விலும் எல்லாம் சாதகமாக நடக்கும். அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம்.

கடக ராசிக்கான வியாழன் பரிகாரம்: வியாழன் அன்று வாழை மரத்தை வழிபட்டு பசு நெய்யில் தீபம் ஏற்றி வழிபடவும். இதனுடன் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொள்வதும் பலனளிக்கும்

துலாம் ராசிக்கான தினபலன்கள்

ஜூலை 18ஆம் தேதி துலாம் ராசிகளுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். நீண்ட கால நண்பரை சந்திக்கலாம். அவரிடமிருந்து முக்கிய தகவல்களைப் பெறுவீர்கள். மகாவிஷ்ணுவின் அருளால், உங்கள் வருமானம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கையில் பல விஷயங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். உலகத்தைப் பற்றிய உங்கள் பார்வை மாறும். உங்கள் மனைவியுடன் ஆன்மீக விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம் ராசிக்குகான வியாழன் பரிகாரம்: தொழில் முன்னேற்றத்திற்கு வியாழன் அன்று பூஜை அறையில் கடவுள்களுக்கு மஞ்சள் பூவினால் ஆன மாலையை சாற்றவும். பணியிடத்தில் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தவும். லக்ஷ்மி நாராயணர் கோவிலில் லட்டுகளை விநியோகிக்கவும்.

மேலும் படிக்க | அருள் பாலிக்கும் கடவுளை பணக்காரராக்கும் பக்தர்கள்! இந்தியாவின் பணக்கார கோவில்கள்!

மகர ராசிக்கான தினபலன்கள்

ஜூலை 18ம் தேதி மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில், வியாபாரத்தில் விரைவான முன்னேற்றம் ஏற்படும். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். கல்வி, வேலை அல்லது பயணம் நிமித்தமாக வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் விருப்பம் நாளை நிறைவேறும். நாளை உங்கள் மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

மகர ராசிகளுக்குகான வியாழன் பரிகாரம்: வியாழன் மாலை மஞ்சள் துணியில் ஒரு நாணயம், வெல்லத் துண்டு மற்றும் ஏழு முழு மஞ்சள் கட்டிகளை கட்டி, அதை ரயில் பாதையின் அருகே எறிந்துவிட்டு, பின்னர் கோவிலுக்குச் செல்லுங்கள்.

கும்ப ராசிக்கான தினபலன்கள்

ஜூலை 18 ஆம் தேதி கும்ப ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும். எதிரிகளின் சதி தோற்கடிக்கப்படும். அதிர்ஷ்டத்தின் துணையுடன் அனைத்து காரியங்களும் எளிதாக முடிவடையும். பழைய முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். விவாஹ யோகம் உள்ளவர்களுக்கு, திருமண உறவுகள் வந்து சேரும், மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பாராட்டும் ஒத்துழைப்பும் கிடைக்கும். 

கும்ப ராசிக்கான வியாழன் பரிகாரம்: வேலை சம்பந்தமான பிரச்சனைகளுள் தீர வாழை மரத்தை வணங்கி மஞ்சள் நிறப் பொருட்களை தானம் செய்யவும். ஆனால் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். 

மேலும் படிக்க | வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க... விக்னங்களை நீக்கும் விநாயகர் சிலை ஒன்றே போதும்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News