Sani Vakra Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனிபகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஆகையால் அவரது தாக்கம் அனைத்து ராசிகளிலும் மிக அதிகமாக இருக்கின்றது.
சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் தனது ராசியை மாற்றுகிறார். இந்த நிகழ்வு சனிப்பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. ராசி தவிர சனிபகவானின் நட்சத்திரம், உதய, அஸ்தமன நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது.
தற்போது சனிபகவான் கும்ப ராசியில் இருக்கிறார். ஜூன் 30 ஆம் தேதி அவர் கும்பத்திலேயே வக்கிர பெயர்ச்சி அடைவார். நவம்பர் 15 ஆம் தேதி வரை அவர் வக்ர நிலையில் இருப்பார். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நிகழும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
துலாம் (Taurus)
சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் அடுத்த ஐந்து மாதங்களுக்கு துலா ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். சனி அருளால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். எனினும் பண விஷயத்தில் சற்று நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். முதலீடு செய்வதற்கான பல வித வாய்ப்புகளை பெறுவீர்கள்.
விருச்சிகம் (Scorpio)
சனி வக்ர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலம் உண்டாகும். இந்த காலத்தில் பொருளாதார நிலையில் ஏற்றம் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல முதலீடுகள் செய்ய வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறவுகளுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனினும் பொறுமையாக பேசி புரிய வைத்தால் நிலைமை சீராகும். பணியிடத்திலும் உங்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம். இது உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கன்னி (Virgo)
கன்னி ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்கிரப் பெயர்ச்சி பல வித வசதிகளைக் கொண்டு வரும். உங்கள் வாழ்வில் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அமைதியும் இருக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும்.
கும்பம் (Aquarius):
சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கும் யோகம் உள்ளது. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | ஜூன் 10-16 வார ராசிபலன்! கவனத்துடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்! ஜோதிட எச்சரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ