டி20 உலக கோப்பை தோல்வி! ஓய்வை அறிவித்த முக்கிய ஆஸ்திரேலிய வீரர்!

David Warner Retires From International Cricket: ஆஸ்திரேலியா அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது வாய்வை அறிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Jun 25, 2024, 04:43 PM IST
  • சர்வதேச கிரிக்கெட்டில் வார்னர் ஓய்வு.
  • அனைத்து வடிவங்களிலும் ஓய்வை அறிவித்தார்.
  • உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே இனி விளையாட உள்ளார்.
டி20 உலக கோப்பை தோல்வி! ஓய்வை அறிவித்த முக்கிய ஆஸ்திரேலிய வீரர்! title=

David Warner Retires From International Cricket: ஆஸ்திரேலியாவின் லெஜண்ட் கிரிக்கெட் வீரர் என்று அழைக்கப்படும் புஷ்பா புகழ் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறி உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் வார்னர். ஆஸ்திரேலிய அணியில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து வடிவத்திலும் சிறந்த ஓப்பனிங் வீரராக இருந்துள்ளார் வார்னர். ஆனால் அவரது ஓய்வு ஒரு கசப்பான தருணத்தில் முடிந்துள்ளது. 2024 டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி இருந்த ஆஸ்திரேலியா அணி தற்போது சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறி உள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியது.

மேலும் படிக்க | டி20இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி என்ன செய்திருக்கிறார்...? ஒரு பார்வை

இதனால் தற்போது அரையிறுதி வாய்ப்பை இழந்து ஊருக்கு திரும்புகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றதை தொடர்ந்து அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறி உள்ளது. ரஷித் கான், நவீன்-உல்-ஹக் சிறப்பாக பந்து வீசியதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் கனவு தகர்ந்தது.

வார்னர் ஓய்வு

கடந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இருந்த டேவிட் வார்னர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தான் ஆஸ்திரேலியாவிற்காக தான் விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என்று முன்கூட்டியே அறிவித்து இருந்தார் வார்னர். அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் பெற வாய்ப்பு இருந்த போதிலும் வார்னர் தனது சர்வதேச வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். 2023 உலக கோப்பையில் தனது கடைசி போட்டியில் விளையாடிய வார்னர், 2024 தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது கடைசி டெஸ்டில் விளையாடினார்.

வார்னரின் சாதனைகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது முதல் டி20 போட்டியில் 43 பந்துகளில் 89 ரன்கள் குவித்து தனது பெயரை உலக அரங்கில் பதித்தார் வார்னர். 110 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உட்பட 3277 ரன்களை அடித்துள்ளார். மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் டி20 போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்த நான்காவது பேட்டர் என்ற பெருமையையும் வார்னர் பெற்றுள்ளார்.

வார்னர் குறித்து ரிக்கி பாண்டிங்

வார்னரின் ஓய்வு குறித்து பேசிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், "டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் கோடையில் ஓய்வு பெற்றார் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் டேவிட் வார்னரை விட ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரரை கண்டுபிடிப்பது சிரமம். என்னால் அவருடன் விளையாட முடிந்தது, கடந்த இரண்டு வருடங்களாக ஐபிஎல்லில் அவருக்கு பயிற்சியாளராக இருந்தேன், அவர் செய்த சாதனைகள் பற்றி அவர் மிகவும் பெருமைப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்... மழையால் தப்பித்த தென்னாப்பிரிக்கா - அரையிறுதியில் யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News