இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டிக்கான அட்டவணை

Last Updated : Jun 29, 2016, 02:19 PM IST
இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டிக்கான அட்டவணை title=

நியூசிலாந்து கிரிக்கெட் அணி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நமது அணிக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. 

இதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டிகள் பின்வருமாறு:-

டெஸ்ட் போட்டி அட்டவணை:-

முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 22

இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் செப்டம்பர் 30

மூன்றாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் அக்டோபர் 8

ஒருநாள் போட்டி அட்டவணை:-

முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் அக்டோபர் 16

இரண்டாவதுஒருநாள் போட்டி டெல்லியில் அக்டோபர் 19

மூன்றாவதுஒருநாள் போட்டி மொகாலியில் அக்டோபர் 23

நான்காவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 26

ஐந்தாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 29.

 

 

Trending News