இந்தியாவை வீழ்த்தியதே பெருமைக்குரிய தருணம்! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

டி20 உலகக் கோப்பையில்  இந்திய அணியை வீழ்த்தியது கடந்த ஆண்டின் சிறந்த தருணம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2022, 08:44 AM IST
  • T20 உலகக்கோப்பையில் இந்தியாவை வென்றது மகிழ்ச்சி
  • ஆஸ்திரேலியாவிடம் தோல்வி வருத்தம்
  • முகமது ரிஸ்வான் 2021 ஆம் ஆண்டுக்கான ஐசிசி வீரருக்காக பரிந்துரைக்கப்பட்டார்
இந்தியாவை வீழ்த்தியதே பெருமைக்குரிய தருணம்! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் title=

2021 டி20 உலகக் கோப்பையின் குழு ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலகக் கோப்பையில் இந்தியா அணிக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பரம எதிரியான இந்தியாவுக்கு (Indian Cricket Team) எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதே இந்த ஆண்டின் சிறந்த தருணம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். 

விராட் கோலி தலைமையிலான இந்தியாவை 151/7 என்று கட்டுப்படுத்திய பிறகு, இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடிக்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார். பாபர் மற்றும் தொடக்க பங்குதாரர் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் சேர்த்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி மகத்தான வெற்றியைப் பெற உதவினார்கள்.

"இது ஒரு அணியாக எங்களுக்கு ஒரு அற்புதமான சாதனையாகும், ஏனென்றால் பல ஆண்டுகளாக உலகக் கோப்பையில் எங்களால் இந்தியாவை (Team India) வீழ்த்த முடியவில்லை. இது இந்த ஆண்டின் சிறந்த தருணம்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) போட்காஸ்டில் பாபர் கூறினார். 

அதேபோல, போட்டியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி மிகவும் ஏமாற்றம் அளித்ததாகவும் பாபர் தெரிவித்தார்.

"அந்த தோல்வி இந்த ஆண்டு என்னை மிகவும் காயப்படுத்தியது, ஏனென்றால் நாங்கள் மிகவும் நன்றாகவும் ஒருங்கிணைந்தும் அற்புதமாக விளையாடினோம்," என்று பாபர் கூறினார். இந்த ஆண்டு இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

"முக்கியமான தருணங்களில் இளம் திறமைகள் களத்தில் ஜொலிப்பதை பார்த்தது மிகப்பெரிய திருப்தி. இப்போது இளம் திறமைகளை உருவாக்க வேண்டிய தருணம்," என்று அவர் மேலும் கூறினார்.

பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் 2021 ஆம் ஆண்டுக்கான ஐசிசி வீரருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஜோஸ் பட்லர், வனிந்து ஹசரங்கா, மிட்செல் மார்ஷ் ஆகியோரும் சிறந்த வீரர்களுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி விருதுகள் 2021, கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் சிறந்த சாதனைகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் விருதாகும். 29 போட்டிகளில் 1,326 ரன்கள் குவித்த ரிஸ்வான், சராசரியாக 73.66 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 134.89 வைத்திருக்கிறார்.

பேட்டிங்கில் மட்டுமல்ல, விக்கெட்  கீப்பராகவும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார் ரிஸ்வான். 2021 ஐசிசி ஆடவர் T20 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தானை அரையிறுதிக்கு கொண்டு செல்ல முக்கிய பங்கு வகித்த அவர், அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்று பெயர் எடுத்தார். 

Also Read | இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News