மோசமாக விளையாடும் ரிஷப்; வாய்ப்புக்காக காத்திருக்கும் 2 வீரர்கள் - ரோகித் முடிவு என்ன?

தொடர்ச்சியாக 20 ஓவர் போட்டிகளில் சொதப்பி வரும் ரிஷப் பன்டுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது ஏன்? என கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 6, 2022, 02:38 PM IST
  • ரோகித் சர்மாவுக்கு சரமாரி கேள்வி
  • ரிஷப் பன்டுக்கு மீண்டும் வாய்ப்பு ஏன்?
மோசமாக விளையாடும் ரிஷப்; வாய்ப்புக்காக காத்திருக்கும் 2 வீரர்கள் - ரோகித் முடிவு என்ன? title=

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான சாதனை படைத்துள்ளார். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவருடைய ஆட்டம் சிறப்பாக இல்லை. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட பொறுப்பற்ற ஷாட் விளையாடி சீக்கரமாக பெவிலியனுக்கு சென்றார். பெவிலியனில் அமர்ந்திருந்த ரோகித் சர்மா, ரிஷப் பன்டின் ஷார்ட் சலெக்ஷனைப் பார்த்து கடுமையான கோபத்தையும் வெளிப்படுத்தினார். 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பிளேயிங் லெவனில் ஆடும் வாய்ப்பு ரிஷப் பன்டுக்கு சாதாரணமாக கிடைத்துவிட வில்லை. ஏற்கனவே சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் தினேஷ் கார்த்திக்கை வெளியே உட்காரவைத்துவிட்டு, ரிஷப் பன்டுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார் ரோகித். அணியில் ஒரு பேட்ஸ்மேனாவது இடது கை பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்பதற்காக ரிஷப் பன்டை தேர்வு செய்தார். 

மேலும் படிக்க | IND vs PAK: இவர் வந்த பிறகு இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி

ஆனால், இந்தப் போட்டியில் பந்த் 12 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார் அவர். ஷதாப் கானின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாட முற்பட்டபோது, கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். அவரின் பொறுப்பற்ற ஆட்டம் பிளேயிங் லெவனில் அவரை வைத்திருப்பதற்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. ரிஷப் பன்டைவிட சிறப்பான ஸ்டைக் ரேட் வைத்திருக்கும் இஷான் கிஷன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். 

56 போட்டிகளில் 49 இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் ரிஷப் பன்ட், 23.61 சராசரியில் 897 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 126.34. 3 அரைசதங்களும் அடித்துள்ளார். அதேநேரத்தில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் 49 போட்டிகளில் 40 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கிறார். இதில், 28.19 சராசரியுடன் 592 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 139.95 ஆகும். சிறந்த பினிஷராகவும் இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து 20 ஓவர் இந்திய அணிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பியுள்ளார். இதேபோல் இஷான் கிஷனின் நம்பர்களும் சிறப்பாக இருக்கிறது. இப்படி வீரர்கள் நல்ல ஃபார்முடன் வாய்ப்பு காத்திருக்கும்போது ரோகித் மீண்டும் மீண்டும் ரிஷப் பன்டை ஏன் தேர்ந்தெடுக்கிறார்? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க | Asia Cup 2022: டிரெஸ்ஸிங் ரூமில் பாகிஸ்தான் வீரர்களின் செயல்; வைரலாகும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News