மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த நபர் மீது அதிமுக உறுப்பினர் தாக்குதல்!

மணல் கடத்தல் குறித்து ஆட்சியரிடம் புகார் அளித்த நபர் மீது அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Apr 26, 2022, 03:33 PM IST
  • புகார் கொடுத்தவர் மீது கொலைவெறி தாக்குதல்.
  • போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் தீ குளிக்க முயற்சி.
  • நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.
மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த நபர் மீது அதிமுக உறுப்பினர் தாக்குதல்! title=

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் கிராமத்தில் அதே பகுதிகளை சேர்ந்த சிலர் செங்கல் சூலை போடுவதற்கு மணல் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அம்பேத்கர் என்பவர் கிராம மக்களோடு சேர்ந்து கடந்த 4 ஆம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மணல் கடத்தல் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்ய சம்மந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

மேலும் படிக்க | விக்னேஷ் லாக்கப் டெத் : 10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு உத்தரவு.!

அதனை தொடர்ந்து ஆய்வு செய்ய வந்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த அம்பேத்கர் மணல் கடத்தல் நடைபெறும் இடத்தை நேரில் சென்று காட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பு கும்பல் அம்பேத்கர் மீது நேற்றைய தினம் தலை உள்ளிட்ட பகுதிகளில் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அம்பேத்கர் நாகை அரசு தலைமை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தாக்குதல் நடத்திய கும்பல் மீது கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீகுளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றனர், அப்போது அவர்களை போலிசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மணல் கடத்தலில் தொடர்புடைய தாக்குதலில் ஈடுபட்ட கோகூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கோபு என்கிற கோபாலகிருஷ்ணன், மகேஷ், உள்ளிட்ட கும்பலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் உருண்டு புரண்டு கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மணல் கடத்தலை காட்டி கொடுத்த நபர் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இவர்கள் குற்றம் சாட்டும் எதிர்த்தரப்பை சேர்ந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கோபு, மகேஷ், குஞ்சப்பன், தங்கம் உள்ளிட்டோர் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நெல்லை ஆட்டோ ஓட்டுனர் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News