மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் 3 நாட்களில் வெளியாகும்: கே.எஸ்.அழகிரி

பத்து தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் மூன்று நாட்களில் வெளியிடப்படும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2019, 08:30 PM IST
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் 3 நாட்களில் வெளியாகும்: கே.எஸ்.அழகிரி title=

தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐ.ஜே.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளனர். 

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்து ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், இன்று திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டது. அந்த பத்து தொகுதிகள் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி போன்றவை ஆகும். 

இந்த பத்து தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் மூன்று நாட்களில் வெளியிடப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Trending News