முதுமலையில் குடியரசு தின விழா! தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்!

முதுமலையில் யானைகள் தேசிய கொடியோடு அணிவகுத்து நிற்க தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசியக்கொடி ஏற்றும்போது தும்பிக்கையை தூக்கி பிளிர்ந்தவாறு மரியாதை செலுத்திய யானைகள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 26, 2023, 05:18 PM IST
  • தேசியக்கொடி ஏற்றும்போது தும்பிக்கையை தூக்கி பிளிர்ந்தவாறு மரியாதை செலுத்திய யானைகள்.
  • நூற்றுக்கும் மேற்பட்ட வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
  • யானைகளுக்கும் கரும்பு, கேழ்வரகு , ராகி போன்ற ஊட்டச்சத்து உணவுகளும் வழங்கப்பட்டன.
முதுமலையில் குடியரசு தின விழா! தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்! title=

இந்தியா முழுவதும் இன்று 74 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை தெப்பக்காடு யானை முகாமில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 28 யானையிலும் காலையில் மாயாற்றில் குளிக்க வைக்கப்பட்டு தெப்பக்காடு யானைகள் முகாமில் ஒரு சேர நிற்க வைக்கப்பட்டது.

ஒவ்வொரு யானைகளும் மேலும் பாகன்கள் அமர்ந்து தேசிய கொடியை பிடித்தவாறு நின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய நிலையில், குடியரசு தின விழாவில், தேசிய கொடியை முதுமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் திவ்யா கொடியேற்றினார்.

மேலும் படிக்க | Income Tax: வருமான வரி தொடர்பான மக்களின் எதிர்ப்பார்ப்பு பொய்க்குமா? மெய்யாகுமா? 

அப்போது தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு சேர யானைகள் அனைத்தும் தும்பிக்கையை தூக்கி பிளிர்ந்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். பின்பு அங்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. குடியரசு தின விழாவை முன்னிட்டு யானைகளுக்கும் கரும்பு, வெல்லம், தேங்காய், கேழ்வரகு , ராகி போன்ற ஊட்டச்சத்து உணவுகளும் வழங்கப்பட்டன. இன்று முதுமலைக்கு சுற்றுலா வந்த சுற்றுலா 74 வது குடியரசு தின விழாவை யானைகளுடன் கொண்டாடி மகிழ்ந்து சென்றனர்.

மேலும் படிக்க | Budget 2023: நடுத்தர வர்க்கம் மகிழும் வகையில் வரி அடுக்கில் மாற்றம் இருக்குமா..!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News