தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் (Tamil Nadu) இன்று காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை (TN Rain) பெய்யும்.
ALSO READ:TN Weather: இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்-IMD
புதுவை, காரைக்கால் பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும். அத்துடன் நாளை தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான மதுரை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதி கனமழையும், லேசான மழையும் பெய்யும். மேலும் தென்மேற்கு, மத்திய மேற்கு வடக்கு அரபிக்கடல் பகுதியில், 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ: TN Weather: அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR