சென்னையில் திடீர் ஜில்-ஜில் மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னை நகரின் பல இடங்களில் திடீரென மழை பெய்வதால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்!

Last Updated : Jun 15, 2018, 06:41 PM IST
சென்னையில் திடீர் ஜில்-ஜில் மழை: மக்கள் மகிழ்ச்சி title=

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வருகின்றது. சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் சென்னையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வானிலை மாறியது. திருவல்லிக்கேணி, எழும்பூர், கோடம்பாக்கம், அசோக்நகர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும்,புறநகர் பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், அனகாபுத்தூர், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

Trending News