கதிர் ஆனந்த் வாகனத்தை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் கட்சியினர்! ஏன் தெரியுமா?

வாணியம்பாடியில் கூட்டணி கட்சியை அழைக்கவில்லை என கூறி கதிர் ஆனந்த் வாகனத்தை காங்கிரஸ் கட்சியினர் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.    

Written by - RK Spark | Last Updated : Apr 10, 2024, 05:11 PM IST
  • கதிர் ஆனந்த் வாகனத்தை காங்கிரஸ் கட்சியினர்.
  • கூட்டணி கட்சியை அழைக்கவில்லை என முறையிட்டதால் பரபரப்பு.
  • பிறகு பேசி சமாதானப்படுத்தி அனுப்பிவைக்கப்பட்டனர்.
கதிர் ஆனந்த் வாகனத்தை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் கட்சியினர்! ஏன் தெரியுமா? title=

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியில் வேலூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‌. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தேவஸ்தானம் பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது ஜாப்ராபாத் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் வேட்பாளர் வாகனத்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  கூட்டணி கட்சியினரை முறையாக அழைக்கவில்லை எனவும் வேட்பாளரிடம் முறையிட்டனர். அதனை தொடர்ந்து வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களை சமாதானம் செய்து நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால் மட்டும் தான் மோடியை வீட்டுக்கு அனுப்ப முடியும் அதனால் தேர்தல் நேரம் முடிந்தவுடன் உங்களிடம் பேசுகின்றேன் என அவர்களை சமாதானம் செய்தார்.

மேலும் படிக்க | பாஜகவை தயவுசெய்து தமிழ்நாட்டிற்குள் விடாதீர்கள்... கோவை மக்களிடம் கும்பிட்டு கேட்ட சீமான்!

அதன் பின்னர் வேனில் இருந்து இறங்கி வந்து காங்கிரஸ் கட்சியினர் சால்வைகளை அணிவித்ததை ஏற்றுக் கொண்டு. இதை வீடியோவாக எடுத்துகொண்டு இருந்த தொலைக்காட்சி செய்தியாளர்களை பார்த்து என்னப்பா பிரஸ் இதெல்லாம் ஏதாவது வெச்சு போட்டுடாதீங்கப்பா நாங்க எல்லாம் ஒன்னா தான் இருக்கின்றோம். தங்களுக்கு எதிரி ஒருத்தர் தான் மோடி தான் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.  இருப்பினும் இந்த சம்பளம் வாணியம்பாடியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் - பவ்யா பேட்டி

கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபிநாத் கை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். கை சின்னத்தில் போட்டியிட்டு உள்ள கோபிநாத்தை ஆதரித்து இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தமிழக தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பவ்யா பிரச்சராம் மேற்கொள்ள வருகை தந்தார். இதன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசுகையில் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில்  சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதுதான் அவரின் சாதனை. குறிப்பாக மணிப்பூர் போன்ற பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரங்களை கண்டுக் கொள்ளாத மோடி இன்று தமிழகத்திற்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளார். இவர் எத்தனை முறை வந்தாலும் தமிழத்தில் பாரதிய ஜனதாவால் கால்பதித்திட முடியாது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திட்டங்களால் பாண்டிச்சேரி, தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றிப் பெறும். அதே போல வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றிப் பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம்  வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்கள் பத்தியில் பெரும வரவேற்பினை பெற்று இருப்பதால் வருக்கின்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றிப் பெறும். அது போல கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிட்டுள்ள கோபிநாத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க | ரூ. 200 கோடி ஹவாலா கடத்தல் முறியடிப்பு... தேர்தல் நிதிக்கான திட்டமா - எந்த கட்சியுடன் தொடர்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News