வானிலை எச்சரிக்கை, நிவாரண பொருட்கள் வழங்கிய விஜய், பிரபல நடிகர் மரணம்! இன்றைய முக்கிய செய்திகள்..

Latest Tamil Nadu News Today Live Updates : தவெக தலைவர் விஜய், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இன்றைய வானிலை அப்டேட், பள்ளிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல முக்கிய செய்திகளை இங்கு பார்ப்போம். 

Written by - Yuvashree | Last Updated : Dec 5, 2024, 06:15 AM IST
    Latest Tamil Nadu News Today Live Updates : தமிழ்நாடு செய்திகள், வானிலை தகவல்கள் உள்ளிட்ட அனைத்து செய்திகளின் உடனடி அப்டேட் இதோ...
Live Blog

Latest Tamil Nadu News Today Live Updates : ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய், மழையால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதையடுத்து, நேற்று பிரபல சீரியல் நடிகர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இது குறித்த லேட்டஸ்ட் தகவல்களை இங்கு பார்ப்போம். 

5 December, 2024

  • 08:03 AM

    வானிலை அப்டேட்!

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் சில பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாமல் இருப்பதால் சில இடங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்ல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், பண்ருட்டி, அண்ணாகிராமம் ஆகிய பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
     
    தென்பெண்ணை ஆற்று கரையோர பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாத காரணத்தால் அங்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல, புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வரும் 22 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News