மதுரையிலிருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயில் ஜூலை மாதம்வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை ஆகஸ்ட் மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்தராபாத் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) செகந்தராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதிவரை திங்கட்கிழமைகளில் இரவு 09.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 08.45 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் மதுரை - செகந்தராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07192) மதுரையில் இருந்து ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதிவரை புதன்கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.25 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.
இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும் படிக்க | பேனா நினைவு சின்ன எதிர்ப்புக்கு காரணம் என்ன?... விளக்கும் அழகிரி
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | கருணாநிதிக்கு பேனா சிலை... வாழ்வாதாரத்தை பாதிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ