தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180-லிருந்து 283 ஆக உயர்வு...
தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிலந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... "தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து, இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 103 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 1040 பேர் சிகிச்சை பெற்று வருக்கின்றனர். தமிழகத்தில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக பதிவாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் தஞ்சாவூரில் மட்டும் 17 பேருக்கும், சென்னையில் 11 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் சுமார் 23934 பேரும், அரசு கண்காணிப்பில் 34 பேரும் உள்ளனர். சுமார் 78,349 பேர் வீட்டுக்கண்காணிப்பு முடித்தவர்கள்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது குணமடைந்தவர்கள் விகிதம் 21.4 ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.1 சதவீதமாகவும் உள்ளது.
District
|
Confirmed
|
சென்னை | 11233 |
கோவை | 127 |
திருப்பூர் | 80 |
ஈரோடு | 70 |
திண்டுக்கல் | 166 |
திருநெல்வேலி | 60 |
நாமக்கல் | 50 |
திருவள்ளூர் | 547 |
செங்கல்பட்டு | 47 |
திருச்சி | 346 |
தேனி | 244 |
மதுரை | 44 |
கரூர் | 141 |
நாகபட்டினம் | 240 |
ராணிபேட் | 38 |
தஞ்சை | 1734 |
விழுப்புரம் | 230 |
தூத்துக்குடி | 26 |
சேலம் | 24 |
வேலூர் | 323 |
திருவாரூர் | 422 |
கூடலூர் | 20 |
விருதுநகர் | 17 |
திருப்பத்தூர் | 17 |
கன்னியாக்குமாரி | 16 |
தென்காசி | 511 |
சிவகங்கை | 11 |
ராமநாதபுரம் | 10 |
நீலகிரி | 9 |
திருவண்ணாமலை | 8 |
காஞ்சிபுரம் | 7 |
கள்ளக்குறிச்சி | 3 |
பெரம்பலூர் | 1 |
அரியலூர் | 1 |