துபாயில் இருந்து கடத்தப்பட்ட தங்கம்! லேட்டா வந்ததால் பிடிபட்ட கடத்தல்காரர்கள்

Cinematic Gold Smuggling: சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம் - தங்க பிஸ்கட் கடத்திய நபர்கள் கைது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 18, 2022, 12:13 PM IST
  • துபாயில் இருந்து கடத்தப்பட்ட தங்கம்!
  • லேட்டா வந்ததால் பிடிபட்ட கடத்தல்காரர்கள்
  • தங்கக் கடத்தலில் ஆணிவேரா துபாய்
துபாயில் இருந்து கடத்தப்பட்ட தங்கம்! லேட்டா வந்ததால் பிடிபட்ட கடத்தல்காரர்கள் title=

சினிமாவில் வருவதைப் போல நம்ப முடியாத வகையில் தங்கம் கடத்திய நபர்களை போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்துள்ளனர்.  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தே.பொடையூர் கிராமத்தைச் சேர்ந்த பாலையா இவர் கடந்த எட்டு மாதம் முன்பு துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார் அங்கு அவருக்கு வேலை கிடைக்கவில்லை.. இதனால் எட்டு மாதம் வேலை இல்லாமல் இருந்துள்ளார்.  எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்று இருந்த நிலையில் துபாயில் இருக்கும் ஒருவர் நான் உங்களை ஊருக்கு அனுப்பி வைக்கிறேன் நான் கொடுக்கும் பார்சலை நான் சொல்லும் நபரிடம் அங்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஊருக்கு வருவதற்கு வழி தேடிக் கொண்டிருந்த பாலையா கடந்த 14ஆம் தேதி துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் சொன்ன நபர் மதுரை விமான நிலையத்திற்கு வரவில்லை அதனால் பாலையா மதுரையிலிருந்து மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மேலும் படிக்க | கொடுத்த கடன் வந்து சேரவில்லை: நரிக்குறவப் பெண் அஸ்வினி குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம் கறிவேப்பலங்குறிச்சி அருகே உள்ள பேரலையூர் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு மதுரை விமான நிலையத்திலிருந்து வாடகை காரில் வந்த பாலையா தான் கொண்டு வந்த பெட்டியை மாமியார் ராணியிடம் கொடுத்து இதனை மறைத்து வையுங்கள் இதை நான் வந்து கேட்கும் வரை யாரிடமும் கொடுக்க கூடாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் துபாயில் பார்சல் கொடுத்து மதுரையில் வாங்கி கொள்வதாக கூறியிருந்த நபர்கள் பாலையா வீட்டிற்கு சென்று அவர் மனைவி முத்துலட்சுமிடம் கேட்டுள்ளார் அவர் தனது கணவர் இன்னும் வரவில்லை என்று கூறி அவர்களை அனுப்பி வைத்துவிட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் அந்த நபர்கள் மதுரை விமான நிலையத்திற்கு சென்று அங்கு உள்ள கார்ஓட்டுனிடம் விசாரித்துள்ளனர். அப்பொழுது அவர்கள் வாடகைக்குச் சென்ற இடத்தை காட்டியுள்ளனர்.

மேலும் படிக்க | கணவன் நடத்தையில் சந்தேகம்; ஆணுறுப்பு மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி!

அங்கு சென்று ராணியிடம் அந்த கும்பல் கேட்டுள்ளனர். தன்னிடம் கேட்காமல் பெட்டியை யாரிடமும் கொடுக்கக்கூடாது என்று மருமகன் சொல்லியிருந்ததால், மாமியார் ராணி, பாலையாவைன் சொந்த ஊருக்குச் செல்வோம் அங்கு பெட்டியை வாங்கி கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் ராணி மற்றும் அவரது உறவினர் மற்றும் அந்த கும்பலுடன் பார்சல் பெட்டியை ஏற்றிக்கொண்டு பாலையாவின் சொந்த ஊரான தே.புடையூர் அருகே வரும் பொழுது நடுவழியிலேயே ராணி மற்றும் உறவினர் இரண்டு பேரிடமிருந்து நான்கு பேரைக் கொண்ட அந்த கும்பல் பெட்டியை பிடுங்கிக் கொண்டு பாதிவழியில் விட்டு விட்டு காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

பின்னர் மாமியார் ராணி மற்றும் அவரது உறவினர் வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் அதன் பேரில் வேப்பூர் போலீசார் தே. புடையூர் கிராமத்தில் இருந்த அதே கும்பலைச் சேர்ந்த ஐந்து நபர்களை பிடித்தனர்.

மேலும் படிக்க | சென்னை வானகரத்தில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

விசாரணையில் பாலையாவை துபாயில் தங்க கடத்தல்காரரிடம் அறிமுகப்படுத்தி வைத்த திருச்சியை சேர்ந்த குமரேசன், மற்றும் செல்வமணி, ஷாகுல் அமீது, காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்ராசு, திருச்சி சேர்ந்த விக்னேஷ் என தெரியவந்தது. பின்னர் இவர்களிடம் வேப்பூர் போலீசார் தனித்தனியாக விசாரணை செய்தனர் .

பாலையா கொண்டு வந்த பெட்டியை திறந்து 3 தங்க பிஸ்கட்டுகளை எடுத்து கொண்டு பெட்டியை மாமியார் ராணியிடம் கொடுத்து விட்டு சென்ற நிலையில் அந்த பெட்டியை டலூர் வெடிகுண்டு சோதனை செயலிழப்பு குழுவினர் அந்த பெட்டியில் சோதனை நடத்தியபோது அதில் பேரிச்சை பழம், சாக்லேட் மற்றும் பிஸ்கட் மட்டுமே இருந்தது.

பின்னர் பாலையாவை பிடித்த வேப்பூர் போலீசார் கடலூர் நுண்ணறிவு பிரிவு போலீசார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். பிறகு பாலையா குமரேசன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.தப்பியோடிய நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | குற்றம்சாட்டிய பெண்ணுடன் சேர்ந்து உணவருந்திய அமைச்சர் சேகர்பாபு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News