சீமான் நடத்தும் நாம் தமிழர் கட்சி 2 ஆண்டுகளில் காணாமல் போகும் - ராஜீவ் காந்தி சவால்

Rajiv Gandhi vs Seeman : சீமான் நடத்தும் நாம் தமிழர் கட்சியை நான் நினைத்தால் 2 ஆண்டுகளில் இல்லாமல் ஆக்குவேன் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகியும், இப்போது திமுகவில் இருக்கும் ராஜீவ் காந்தி எச்சரித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 8, 2024, 02:06 PM IST
  • நாம் தமிழர் கட்சி 2 ஆண்டுகளில் காணாமல் போகும்
  • சீமான் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்
  • எச்சரிக்கும் திமுகவின் மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி
சீமான் நடத்தும் நாம் தமிழர் கட்சி 2 ஆண்டுகளில் காணாமல் போகும் - ராஜீவ் காந்தி சவால்

Rajiv Gandhi, Seeman News : நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான், திமுக குறித்தும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதும் கடுமையாக விமர்சனங்கள் செய்தார். விமர்சனத்துக்கு ஒரு சொல்லை நீதிமன்றே பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கும் நிலையிலும், அச்சொல்லை பயன்படுத்தி சீமான் அந்த மேடையில் கடுமையாக பேசினார். இதற்கு திமுக தரப்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி சீமானுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தான் நினைத்தால் இன்னும் 2 ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சியை இல்லாமல் ஆக்குவேன் என்றும், அதற்கான திராணி என்னிடம் இருக்கிறது, சீமான் வேண்டுமென்றால் இந்த கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் என்றும் சவால் விட்டுள்ளார். 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | பிரியாணி மேன் மீண்டும் கைது - கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்தியதாக புகார்

" சீமான் நடத்தும் நாம் தமிழர் கட்சிக்கு பெயர் வைத்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன், அக்கட்சியை இன்னும் இரண்டு ஆண்டுகளில் இல்லாமல் ஆக்க முடியும். எனக்கு அந்தளவுக்கு திராணி இருக்கிறது என்பது சீமானுக்கும் தெரியும். முடிந்தால் இந்த கேள்விக்கு சீமானை பதில் சொல்ல சொல்லுங்கள். அவர் கட்சி நடத்தவில்லை, கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறார். நாம் தமிழர் கட்சிக்கு இன்னும் கனடா, சுவிட்சர்லாந்து நாடுகளில் இருந்தெல்லாம் பணம் வந்து கொண்டிருக்கிறது. இது சட்டவிரோதம், மோசடி. மத்திய பாஜக இது மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவருக்கு வரும் பணத்தை ஏன் கட்டுப்படுத்தவில்லை?. ஏனென்றால் பாஜகவின் கள்ளக்குழந்தை தான் சீமான்" என கொந்தளிப்போடு பேசியிருக்கிறார் ராஜீவ் காந்தி. 

தொடர்ந்து பேசிய ராஜீவ் காந்தி, "ஒரு அரசியல் கட்சி, கொள்கை என்று எதுவும் நாம் தமிழர் கட்சியில் இல்லை. அவர் என்ன கொள்கையோடு இருக்கிறார்?, பேசுகிறார். இன்று ஒன்று பேசுகிறார், நாளை ஒன்று பேசுகிறார். மன பிறழ்வு அடைந்தவர்களின் பேச்சு தான் இப்படி இருக்கும். மேடையில் மது ஒழிப்பு பேசுவதும், ரூமுக்கு வந்ததும் வேறாக இருப்பதும் தான் ஒரு தலைவனுக்கு அழகா. மேடையில் மது ஒழிப்பு பேசும் சீமான் மது ஆலை வியாபாரிகளிடம் மாதம் 10 லட்சம் ரூபாய் வாங்கவில்லை என்று சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். ஆதாரத்தோடு நான் அம்பலபடுத்துவேன். சீமான் காமராஜ், அப்துல்கலாம், முத்துராமலிங்க தேவர் குறித்தெல்லாம் பேசிய பேச்சுகளின் ஆடியோக்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் வெளிவரப்போகிறது. அப்போது தெரியும்.!" என்றும் புதிய சஸ்பென்ஸ் ஒன்றையும் கொளுத்தி போட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | சொத்துகுவிப்பு வழக்கை தோண்டும் நீதிமன்றம்... ஷாக்கில் திமுக அமைச்சர்கள்? - நீதிபதியின் உத்தரவு என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News