16 கோடி ரூபாய் சிகிச்சை... தொண்டைக்குழியில் துளையுடன் குழந்தை: உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர்

பொம்மைகளுடன் சுற்ற வேண்டிய 8 மாத குழந்தை தொண்டை குழியில் துளையிட்டு இயந்திரங்களுடன் படுக்கையில் இருக்கும்  சோகம்; ஒசூரில் 8 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாயை உதவிட மக்கள் முன் நிற்கும் பெற்றோர்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 11, 2024, 04:06 PM IST
  • அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை.
  • 16 கோடி ரூபாய்க்கான சிகிச்சை.
  • உதவி கேட்டு நிற்கும் பெற்றோர்.
16 கோடி ரூபாய் சிகிச்சை... தொண்டைக்குழியில் துளையுடன் குழந்தை: உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர் title=

அம்மா சொல்லு அப்பா சொல்லு என பெற்றோர்கள் கூற, குழந்தை யாரை அழைப்பாள் என ஆசையாய் எதிர்ப்பார்த்து மகிழ வேண்டிய பெற்றோர், குழந்தையின் கழுத்துக்குழியில் துளையிட்டு பைப் செலுத்தி உயிரை காப்பாற்ற இமாலய இலக்கை எதிர்நோக்கும் தவிப்பை விவரிக்கிறது இந்த பதிவு.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த எட்டிகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல், லாவண்யா என்பவரை திருமணம் செய்தார். கல்வி கடன் வாங்கி படித்த படிப்பிற்கு பிறகு பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் மகிழ்ச்சி உச்சிக்கே சென்றிருக்கிறார். புது மனைவி, புது வேலை, புது ஊர் என  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, பிரகாஷ் நகரில் வாடகை வீட்டிற்கு வந்தது புதுமண தம்பதி.

கல்யாணத்திற்கு பிறகு, பெற்றோர் ஆக போகிறோம் என்கிற மகிழ்ச்சி, பெற்றோராக உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும். மென்பொறியாளரான  சக்திவேல் - லாவண்யா தம்பதிக்கு கடந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது. வீட்டில் முதலாவது பிறக்கும் குழந்தைகள் எவ்வளவு அன்பை பெறக்கூடியவர்களாக இருப்பார்கள் என்பதை மூத்த பிள்ளைகளாக இருப்பவர்கள் மட்டுமே உணர்ந்திருக்க முடியும்.

மேலும் படிக்க | சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்! முழு விவரம்

இவர்களும் தங்களது மகள் பிறப்பை கொண்டாடி தீர்த்த நிலையில், 5 மாத பெண் குழந்தைக்கு சளி பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று குணமான பின்பு, மூச்சுதிணறல் பிரச்சனை அதிகமாக இருந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூவில் உள்ள நாராயணா இருதாலயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதுதான்  குழந்தை ஷத்விகாவிற்கு முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு எனும் அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிய வந்தது. இது பெற்றோருக்கு பெரிய அதிர்ச்சியை  ஏற்ப்படுத்தி உள்ளது.

ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி என்னும் நோயால் பாதிக்கப்பட்ட  ஷத்விகாவை காப்பாற்ற ஒரே வழி அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ரூ.16 கோடி விலை மதிப்பிலான மருந்து மட்டும் தான் என மருத்துவர் திருமதி ஹான் தெரிவித்தது பேரிடியாக அமைந்துள்ளது. சக்திவேல் வருமானத்தாலோ, குடும்ப பிண்ணனியாலோ இவ்வளவு பெரிய தொகை சேர்க்கமுடியாத நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் நிதி உதவியை கோரி பெற்றோர் போராடி வருகின்றனர்.

இதுக்குறித்து குழந்தையின் தாய் லாவண்யா பேசுகையில், "ஒரு தாயாக ஒவ்வொரு முறை எனது மகளை பார்க்கிறபோதும், 16 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து மருந்தை வாங்கி உயிரை காப்பாற்றிட முடியுமா என்கிற கேள்வி எழும், ஆனால் எப்படியாவது அப்பா, அம்மா நாங்க இருக்கோம் காப்பாத்திடுவோம் னு எனது மகளுக்கு சொல்லுவோம். 8 மாத குழந்தை அழுகிறது என்றால், குழந்தை எதற்காக அழுகிறது என்று தெரியாமல் என்ன தேவை என அறிந்துக்கொள்ள முடியாமல் ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன். தெய்வம் நேரில் வராது என்பார்கள், எனது மகளுக்காக சிறு உதவியை செய்யும் மக்களே எனக்கு கடவுளாக இருக்கின்றனர் என" என கூறி பொதுமக்களிடம் உதவிக்கான கோரிக்கையை வைத்துள்ளார்.

குழந்தையின் தந்தை சக்திவேல் பேசுகையில், "பலரும் எங்களுக்கு அவர்களால் முடிந்ததை உதவினாலும் இமாலய தொகையாக உள்ள 16 கோடி ரூபாயை பெற முதல்வர், சுகாதார துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உதவிக்காக காத்திருக்கிறோம். 16 கோடி ரூபாய் பெரிய தொகை என்றாலும் உதவ முன்வரும் 10 லட்சம் பேர் தலா 160 ரூபாய் என்று வழங்கினாலே எனது மகளின் உயிரை காப்பற்றி சிரிப்பை காண முடியும்" என்றார்.

ஜீன் ரிப்ளேஸ்மென்ட் தெரபிக்காக அமெரிக்காவில் கிடைக்கும் ஜோல்ஸ்ஜென்மா என்கிற மருந்தின் விலை 16 கோடி ரூபாய் என்பதால் குழந்தையின் உயிரை காக்க பெற்றோர் கண்ணீர் மல்க அரசு, தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது - ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News