கொரோனா தொற்று எண்ணிக்கையில் புதிய உச்சத்தை தொட்டது தமிழகம்....

மாநில சுகாதாரதுறை அமைச்சகதின் புல்லட்டின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 3,940 கொரோனா தொற்றுகள் மற்றும் 54 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

Last Updated : Jun 28, 2020, 07:12 PM IST
  • 37 மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது, குறிப்பாக இன்று மட்டும் 1,992 புதிய தொற்றுகளை பதிவு செய்து.
  • சென்னையில் ஒட்டுமொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 53,762-ஆக அதிகரித்துள்ளது.
  • செங்கல்பட்டு (5,051), திருவள்ளூர் (3,524), மதுரை (1,995) மற்றும் காஞ்சீபுரம் (1,791) தொற்றுகளை பதிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று எண்ணிக்கையில் புதிய உச்சத்தை தொட்டது தமிழகம்.... title=

மாநில சுகாதாரதுறை அமைச்சகதின் புல்லட்டின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 3,940 கொரோனா தொற்றுகள் மற்றும் 54 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 82,275-ஆகவும், செயலில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை 35,656-ஆகவும் உள்ளன என்று மாநில சுகாதார புல்லட்டின் குறிப்பிட்டுள்ளது.

READ | கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா...

37 மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது, குறிப்பாக இன்று மட்டும் 1,992 புதிய தொற்றுகளை பதிவு செய்து. இதையடுத்து சென்னையில் ஒட்டுமொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 53,762-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து செங்கல்பட்டு (5,051), திருவள்ளூர் (3,524), மதுரை (1,995) மற்றும் காஞ்சீபுரம் (1,791) தொற்றுகளை பதிவு செய்துள்ளது.

சுகாதாரத்துறை தகவல்கள் படி கடந்த 24 மணி நேரத்தில் 54 இறப்புகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் COVID-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,079-ஆக அதிகரித்துள்ளது.

நேர்மறையான பக்கத்தில், 1,443 Covid-19 நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆக, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மொத்தமாக குணப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 45,537-ஆக உயர்ந்துள்ளது. 

READ | சலூன் கடைகள் செயல்பட அனுமதி... இயல்பு நிலைக்கு திரும்புகிறதா மும்பை?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 0-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4012-ஆக அதிகரித்துள்ளது.

தகவல்கள் படி இதுவரை, 11,10,402 மாதிரிகள் (இன்று 32,948 மாதிரிகள்) சோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 47 அரசு மற்றும் 43 தனியார் ஆய்வகங்களில் COVID-19 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தமிழக அரசின் புல்லட்டின் தெரிவிக்கிறது.

Trending News