பழைய வகை எரிவாயு சிலிண்டர்கள் கனமான ஸ்டீல் தகடினால் செய்யப்பட்டவை. தூக்குவதற்கு சிரமமானது. வீட்டில் உள்ள பெண்கள் திடீரென நகர்த்தி மாற்றுவதற்கு கூட கடினமாக இருந்து வந்தது. மேலும் வெப்பம் அதிகமாகும்போது இந்த சிலிண்டர்கள் வெடிக்கும் தன்மை கொண்டவை. இந்த சிக்கல்களை சரிசெய்ய பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதுதான் Composite வகை சிலின்டர்கள்.
தற்போது இந்தியாவில் 10 கிலோ மற்றும் 5 கிலோ composite சிலிண்டர்கள் மார்கெட்டில் கிடைக்கின்றன. பல லேயர்களால் ஆன இந்த சிலிண்டர்கள் இலகுவானவை, துரு பிடிக்காதவை, குறைந்த எடை கொண்டவை, பார்ப்பதற்கு அழகானவை அவற்றையெல்லாம் விட எளிதில் வெடித்துவிடாத பாதுகாப்பானவை. கூடுதல் சிறப்பம்சமாக இந்த வகை சிலிண்டர்களில் எவ்வளவு எரிவாயு மிச்சம் உள்ளது என்பதை பார்க்க முடியும்.
மேலும் படிக்க | இந்திய அரசியலை புரட்டும் ’புல்டோசர்’ வரலாறு
நீங்கள் தற்போது எரிவாயு சிலிண்டர் வாங்கும் டீலர்களிடம் பேசி இந்த சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான டெபாசிட் தொகை ஸ்டீல் சிலிண்டர்களை விட சிறிது அதிகம். அந்த கூடுதல் தொகையை மட்டும் செலுத்திவிட்டு இந்த சிலிண்டர்களுக்கு மாறிவிடலாம். பல கூடுதல் நன்மைகள் இந்த சிலிண்டர் வகையில் இருப்பதால் சிறிதளவிலான கூடுதல் டெபாசிட் ஒரு சுமையாக இருக்காது.
மேலும் படிக்க | Bank Locker: விதிகளில் மாற்றம், தெரிந்துகொள்வது அவசியம்
முதற்கட்டமாக பெரிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Composite வகை சிலிண்டர்கள் படிப்படியாக நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR