மனிதர்களைக் கொல்லும் மனிதர்களை கொலையாளி என்று சொல்வோம். ஆனால், ரோபோ கொலையாளியாக மாறிய செய்திகளை குறைவாகவே கேட்டிருப்போம். வேலையில் இருக்கும் ஒரு நபரை ரோபோக்கள் கொன்ற செய்திகள் உடல் நடுங்க வைக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி, நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இருக்கும் நிலையில், இயந்திரங்கள் மனிதர்களை தாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்ற அச்சம் மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அதிலும், செயற்கை நுண்ணறிவு பிரபலமாகிவரும் இந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் மனிதர்களை என்ன வேண்டுமானாலும் செய்யும் என்ற பயம் அதிகரித்து இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு அண்மையில் தான் பிரபலமாகி இருக்கிறது. ஆனால், சுமார் நாற்பது தசாப்தங்களுக்கு முன்னதாகவே இந்த பயம் மக்களுக்கு ஏற்பட்டது. ரோபோ மனிதர்களை அச்சுறுத்துவதும், உயிரைப் பறிப்பதும், 45 ஆண்டுகளுக்கு முன்பு 1979 இல் நடந்தேறிவிட்டது.
கொலையாளியாக மாறிய ரோபோ
செயற்கை நுண்ணறிவும், ரோபோக்களும் உலகையே ஆட்டிப்படைக்கும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தோல்வியை ஏற்கத் தயாராக இல்லை. தொழில்நுட்பத்தின் உதவியுடன், வீட்டு வேலைகள், மசாஜ் என வீட்டு உபயோகத்திலேயே ரோபோக்கள் வந்துவிட்ட நிலையில், இயந்திரங்களைப் பற்றிய அச்சம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
மேலும் படிக்க | GNSS சுங்கக் கட்டணம் எப்போது அமலுக்கு வரும்? FASTagஐ விட சிறந்த கட்டண முறையா இது?
IFLScience இன் அறிக்கையின்படி, 45 ஆண்டுகளுக்கு முன்பு 1979 இல், ஒரு ரோபோ முதல் முறையாக ஒரு மனிதனைக் கொன்றது. ரோபோவால் உயிரிழந்த உலகின் முதல் நபர் ராபர்ட் வில்லியம்ஸ் என்ற அமெரிக்கர் ஆவார். இந்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றது.ராபர்ட் வில்லியம்ஸ், மிச்சிகனில் உள்ள பிளாட் ராக்கில் உள்ள ஃபோர்டு மோட்டார் கம்பெனி காஸ்டிங் ஆலையில் பணிபுரிந்துவந்த 25 வயது இளைஞர். சம்பவம் நடந்த நாளில் அவர் தொழிற்சாலையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு சில பொருட்களை நகர்த்துவதற்கான இடத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார்.
இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை. இயந்திரக் கோளாறு இருக்கும் என்று சந்தேகித்த ராபர்ட் வில்லியம்ஸ், மூன்றாவது மாடியில் ஏறி சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, இயந்திர கை அவரை பின்னால் இருந்து தூக்கி வீசியது. நடந்தது என்ன என்ற விசாரணையில், ரோபோ அமைப்பு வில்லியம்ஸை ஒரு உயிரற்ற பொருளாகக் கருதியதாகவும், அதனால் அவரை சேமிப்பகப் பிரிவில் இருந்து தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | போலீஸ் இருப்பாரு... பார்த்து போங்க ... எச்சரிக்கும் கூகுள் மேப்ஸ்... நண்பேன்டா
இழப்பீடு
இந்த பயங்கரமான விபத்து தொடர்பாக, இயந்திரத்தின் உற்பத்தியாளரான லிட்டன் இண்டஸ்ட்ரீஸ் மீது ராபர்ட் வில்லியம்ஸின் குடும்பத்தினர் 1983 ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தனர். இயந்திர கையில், போதுமான பாதுகாப்பு சாதனங்கள் நிறுவப்படவில்லை என்ற வாதம் வென்றதில், முதலில் $10 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டது, 1984 இல் அது $15 மில்லியனாக உயர்த்தப்பட்டது.
ஜப்பான் மற்றும் தென் கொரியா சம்பவங்கள்
இதே போன்ற சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு (1981 இல்), ஜப்பானில் நிகழ்ந்தது, அகாஷியில் உள்ள கவாசாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஆலையில் 37 வயதான கென்ஜி உராடா என்ற இளைஞர் இயந்திரக் கையால் கொல்லப்பட்டார். செயலிழந்த ரோபோவை அவர் ஆய்வு செய்துக் கொண்டிருந்தபோது நடைபெற்ற சம்பவம் இது.
அதேபோல், தென் கொரியாவில் ஒரு ரோபோ ஒரு மனிதனை நசுக்கியது, உணவுப் பாத்திரங்களையும் மனிதரையும் வேறுபடுத்திப் பார்க்க ரோபோவுக்குத் தெரியவில்லை என்று தென் கொரிய செய்தி நிறுவனம் யோன்ஹாப் தெரிவித்துள்ளது. ரோபோவின் கை, அந்த நபரை காய்கறி பெட்டி என்று தவறாகக் கருதி, அவரை கன்வேயர் பெல்ட்டின் மீது தள்ளியது, அங்கு அவரது முகம் மற்றும் மார்பு இயந்திரத்தால் நசுக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார்.
மேலும் படிக்க | அட்டகாசமான ஸ்டைலுடன் குறைவான விலையில் எம்ஜி விண்ட்ஸ்டர் கார்! பேட்டரிக்கு வாடகை ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ