NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்களே இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ஏன்? என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!
அதிமுக சட்ட ஆலோசகரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் சபாநாயகருமான டாக்டர் P.H.பாண்டியன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
“மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்” என்று அவசரச்சட்டம் பிறப்பித்திருக்கும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால், பாராட்டு விழா நடத்த தயார் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் வழக்கை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே, வழக்கை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அமெரிக்க அரசால் செயல்படுத்த முடியாத திட்டங்களை தமிழகத்தில் கல்விக்காக செயல்படுத்தி வருவது அதிமுக கட்சி தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சாரக் காரான ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா என்ற மின்சாரக் காரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார்!
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, மாநிலம் முழுவதும் குடிமராத்து பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகள் குறித்த விபரங்களை தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது!
உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்க காவிரியின் குறுக்கே மேலும் 3 இடங்களில் தடுப்பணைகள கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக, அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.