தேனியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து திண்டுக்கல் மற்றும் தேனி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங்ராஜாவிற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். குற்றவாளி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய சென்ற போதுதான் என்கவுண்டர் நடந்தது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தில் கொலை செய்த பெண்ணின் உடலை சூட்கேஸில் வைத்து கொலையாளி மணிகண்டன் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திருப்பத்தூரில் 14,000 ரூபாய் கடனை திருப்பித்தரவில்லை என்பதால் நண்பன் மீதான கோபத்தில் 2 குழந்தைகளை கொன்ற நபரின் செயல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
சென்னை திருவேற்காடு பகுதியில் முறையாக அனுமதி இன்றி நடத்தி வந்த அப்பு பிரியாணியின் குடோன் மற்றும் கடைகளை மூடி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணை தற்போது காணலாம்.
தூம் 2 படத்தில் வரும் ரித்திக் ரோஷன் போல திருட வந்த திருடனின் மாஸ்டர் பிளான் மிகப் பெரிய சொதப்பலில் முடிந்துள்ளது. திருடன் flop ஆனது எந்த இடத்தில்?என்ன நடந்தது பார்க்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே சாலையில் நின்றிருந்த ஈச்சர் மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் அண்ணனும் தம்பியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அரியமங்கலமத்தில் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்து சாப்பிட்ட 15 வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன என்பதை காணலாம்.
கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக சர்ச்சைக்குரிய பேராசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று கல்லூரி திறக்கப்பட்டது.
தலைக்கவசம் அணியாமல் வந்த வியாபாரியை வாகன சோதனையின்போது தடுத்து நிறுத்திய காவல் துறையினர், சாவியை எடுத்துக்கொண்டு அபராதத் தொகைக்கான பில்லைத் தராமல் அலைக்கழித்ததால் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் இரும்புக் கம்பியை வைத்து கெத்து காட்டுவதாக நினைத்து ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர், ஒரு மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு இனி யாரும் அப்படி செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அருகே தாளப்பதி கிராமத்தில் உள்ள நெடுங்காளியம்மன் திருக்கோவில் பட்டியலில் இன மக்கள் உள்ளே சென்று வழிபட தடை விதிக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
300 கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெற வந்த நோயாளியை அலட்சியமாக நடத்திய மருத்துவமனை நிர்வாகத்திற்கு நாகை நுகர்வோர் நீதிமன்றம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.