மக்களே உசார்! ஏப்ரல் 1 முதல் இந்த பொருட்களின் விலை உயருகிறது!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை மத்திய அரசு உயர்த்துவதால் சில பொருட்களின் விலை உயருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Mar 29, 2023, 08:09 AM IST
  • சமையலறை மின்சார புகைபோக்கிக்கான வரி 7.5% இல் இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது.
  • காப்பர் ஸ்கிராப்பின் மீது 2.5 சதவீதம் சலுகை அடிப்படை வரியை தொடரும்.
  • தங்கத்தின் விலை ஏப்ரல் 1ம் தேதி முதல் அதிகரிக்கிறது.
மக்களே உசார்! ஏப்ரல் 1 முதல் இந்த பொருட்களின் விலை உயருகிறது! title=

உள்ளூரில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், சில பொருட்களின் விலை ஏப்ரல் 1, 2023 முதல் அதிகரிக்க உள்ளது.  அடுத்த மாதம் முதல் தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நகைகள், உயர் பளபளப்பான காகிதம் மற்றும் வைட்டமின்கள் போன்றவற்றின் விலைகள் உயரப்போகிறது.  2023-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பின்படி, கேமரா லென்ஸ்கள் மற்றும் மொபைல் போன்கள் போன்றவற்றின் விலை மலிவானதாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் மின்சார சமையலறை புகைபோக்கிகள், தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற பொருட்களின் விலை ஏப்ரல் 1 முதல் உயரும்.

மேலும் படிக்கவும்: 2 பான் கார்ட் இருக்கா? அபராதம், சிறை தண்டனை கிடைக்கும்: இப்பவே இப்படி சரண்டர் பண்ணுங்க!!

கேமரா லென்ஸ்கள், ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் வைரங்கள், செல்லுலார் மொபைல் போன்கள், லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் இவி தொழில்துறைக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் மலிவானதாக இருக்கும்.  பட்ஜெட் தாக்கலின் போது, ​​ஆடைகள், கடல் உணவுகளான உறைய வைக்கப்பட்ட,  உறைய வைக்கப்பட்ட கனவா மீன்கள், பெருங்காயம், கோகோ பீன்ஸ் ஆகியவற்றின் மீதான சுங்க வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.  இது தவிர மெத்தில் ஆல்கஹால், அசிட்டிக் அமிலம், வெட்டிய பளபளப்பான வைரங்கள், பெட்ரோலியப் பொருட்களுக்குத் தேவையான ரசாயனங்கள், செல்லுலார் மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ்கள் மீதான சுங்க வரியையும் மத்திய அரசு குறைத்துள்ளது.  மேலும் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலில் பல பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை மத்திய அரசு அதிகரித்தது 

நிதியமைச்சர் சீதாராமன் கருத்துப்படி, சமையலறை மின்சார புகைபோக்கிக்கான வரி 7.5% இல் இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது.  ஆய்வகத்தால் வளர்க்கப்படும் வைரங்களைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் விதைகளுக்கான அடிப்படை வரியையும் மத்திய அரசு குறைத்துள்ளது.  ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக இறால் தீவனத்தின் மீதான வரியை மத்திய அரசு குறைக்கும் என்றும், காப்பர் ஸ்கிராப்பின் மீது 2.5 சதவீதம் சலுகை அடிப்படை வரியை தொடரும் என்றும் தெரிவித்தார்.

ஏப்ரல் 1 முதல் விலை உயரப்போகும் பொருட்களின் பட்டியல்:

- வீட்டில் எலக்ட்ரானிக் புகைபோக்கிகள்
- தங்கம்
- வெள்ளி பாத்திரங்கள்
- வன்பொன்
- சிகரெட்
- அணிகலன்கள்

ஏப்ரல் 1 முதல் விலை மலிவாக கிடைக்கும் பொருட்களின் பட்டியல்:

- பொம்மைகள்
- மிதிவண்டிகள்
- டி.வி
- மொபைல்கள்
- மின்சார வாகனங்கள்
- எல்இடி டிவி

மேலும் படிக்கவும்: மக்களே உசார்! மார்ச் 31-க்குள் நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News