கடந்த வெள்ளிக்கிழமையன்று மத்திய அரசு குறிப்பிட்ட சில சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது, இந்த உயர்வு 2023 ஜனவரி-மார்ச் காலாண்டிற்கானது. நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கியானது சில திட்டங்களின் வட்டி விகிதங்களை உயர்த்திவரும் நிலையில் தற்போது சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுகிறது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | ஆண்டின் முதல் நாளே அதிர்ச்சி அளித்த எல்பிஜி சிலிண்டர் விலை, இல்லத்தரசிகள் ஷாக்
தற்போது 20பிபிஎஸ் மற்றும் 110பிபிஎஸ் வரம்பில் உயர்வுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த உயர்வு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது. தற்போது அரசு உயரதியுள்ள வட்டி விகிதங்களின்படி, தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி) 6.8% விகிதத்திலிருந்து 7% ஆகவும், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 7.6% விகிதத்திலிருந்து 8% ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதேசமயம், பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) மீதான வட்டி விகிதங்களில் அரசு எந்தவித மாற்றத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இதன் வட்டி விகிதம் தொடர்ந்து 7.1% ஆக தான் இருக்கிறது.
மேலும் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான அஞ்சல் அலுவலக டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் 1.1 சதவீத புள்ளிகள் வரை உயரவுள்ளது. ஒரு வருட டெர்ம் டெபாசிட்டுகளுக்கு தற்போது 6.6% வட்டியும், இரண்டு மற்றும் மூன்று வருட டெபாசிட்டுகளுக்கு 6.8% மற்றும் 6.9% வட்டியும் கிடைக்கும். ஆனால் 5 வருட டெர்ம் டெபாசிட்டுகளின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, இதன் வட்டி விகிதம் தொடர்ந்து 5.8% ஆகவே உள்ளது.
மேலும் படிக்க | இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம், சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ