இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உணவு டெலிவரி நிறுவனமான Zomato முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி Zomato நிறுவனம் லோன் மற்றும் கிரெடிட் வணிகத்தில் ஈடுபடப்போவது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Zomato நிறுவனத்தின் இந்த முடிவு அதன் பங்குதாரர்களுக்கு மிகவும் முக்கியமானது. தீபிந்தர் கோயலின் நிறுவனமான Zomato கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Zomato Payment Private Ltd என்ற நிறுவனத்தை தொடங்கியது. இந்த நிறுவனத்தை தொடங்கியதற்கான நோக்கம் பேமென்ட் அக்ரிகேட்டரின் (PA) உரிமத்தைப் பெறுவதாகும். இதற்குப் பிறகு, பிப்ரவரி 2022ல் Zomato Financial Services உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனத்தால் NBFCன் உரிமத்தைப் பெற முடியவில்லை.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசு
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 2022ல் இந்திய ரிசர்வ் வங்கிக்கு இது தொடர்பாக அளித்த விண்ணப்பத்தை தற்போது திரும்ப பெற்றுள்ளதாக Zomato பங்குச் சந்தையில் தெரிவித்துள்ளது. Zomato ஆர்பிஐயிடம் வங்கி அல்லாத நிதி நிறுவன (என்பிஎஃப்சி) உரிமத்தை கோரியது குறிப்பிடத்தக்கது. Zomato நிறுவனத்தின் இந்த முக்கிய முடிவு எங்களது வருவாய் அல்லது செயல்பாடுகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் வெளிப்படுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Paytmம் உடன் ஒப்பந்தம்
Paytm நிறுவனத்தின் திரைப்படம் மற்றும் டிக்கெட் முன்பதிவு வணிகத்தை வாங்குவதற்கு Zomato முன்வந்து அதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த மாதம் கூறப்பட்டது. இந்த தகவலை Zomato நிறுவனமும் ஒப்புக்கொண்டு இருந்தது. ஆனால், இது குறித்தான இறுதி முடிவு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. Paytm நிறுவனத்தின் டிக்கெட் முன்பதிவிற்கான வணிகம் மட்டும் சுமார் ரூ. 1,600-1,750 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் இருந்து பெறப்படும் பணத்தையும் சேர்த்து இந்த ஒப்பந்தம் ரூ.2,000 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நடந்து முடிந்தால் இது அவர்களின் மூன்றாவது மிகப்பெரிய ஒப்பந்தம் ஆகும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு Uber Eats நிறுவனத்தை தங்களது இணைத்து கொண்டது. அதன் பிறகு 2021ல் Blinkit நிறுவனத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து Zomato கையகப்படுத்தியது. Blinkitஐ 4,447 கோடிக்கு வாங்கியது Zomato நிறுவனம். நேற்று பங்கு சந்தை முடிவில் Zomato பங்குகள் பிஎஸ்இயில் 2.5% லாபத்துடன் ரூ 209.05 ஆக முடிந்தது. 2021 ஆம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட Zomato 1,84,528.13 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Paytm நிறுவனம் தற்போது மிகப்பெரிய நிதி சிக்கலில் உள்ள நிலையில் Zomato இந்த டீலை முடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | நுழைவுத்தேர்வுகளுக்கான வடிவத்தை மாற்றிய NTA! புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ