Currency: 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

125 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இஸ்கான் நிறுவனர் சுவாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்தநாளில்,அவரை சிறப்பு செய்யும் வகையில் இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது... 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 2, 2021, 08:00 AM IST
  • 125 ரூபாய் நாணயம் வெளியீடு
  • பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு நாணயத்தை வெளியிட்டார்
  • இஸ்கான் நிறுவகரின் நினைவாக சிறப்பு நாணயம் வெளியீடு
Currency: 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி title=

இஸ்கான் நிறுவனர் சுவாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி 125 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

கிருஷ்ண உணர்வுக்கான சர்வதேச சங்கம் (International Society for Krishna Consciousness) என்ற அமைப்பை நிறுவியவர் ஸ்ரீ பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா ((Srila Bhaktivedanta Swami Prabhupada). அவருடைய 125 வது பிறந்தநாள் விழாவில், சிறப்பு நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இந்த சிறப்பு நாணயத்தை வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த நினைவு நாணயத்தை வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சி மூலம் வெளியிட்டார். சுவாமி பிரபுபாதா ஒரு சிறந்த தேசபக்தர்
என்பது குறிப்பிடத்தகக்து. நாணயத்தை வெளியிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோதி, சுவாமி பிரபுபாதா இயற்கைக்கு அப்பாற்பட்ட கிருஷ்ண பக்தர் என்று விவரித்தார். அவர் ஒரு சிறந்த தேசபக்தர் என்றும் சிலாகித்தார்.

Also Read | Pension: இந்தியாவில் ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா? வரலாறு

"நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் சுவாமிஜி (Srila Bhaktivedanta Swami Prabhupada) போராடினார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாக, அவர் கல்வி பயின்ற ஸ்காட்டிஷ் கல்லூரியில் டிப்ளமோ பெற மறுத்துவிட்டார்."

இஸ்கான் அமைப்பு, ஹரே கிருஷ்ணா இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களை நிறுவியுள்ளது சுவாமி பிரபுபாதா தோற்றுவித்த இஸ்கான் அமைப்பு. உலகிற்கு பக்தி யோகத்தின்ன் பாதையைக் காட்டும் பல புத்தகங்களை சுவாமி பிரபுபாதா எழுதியுள்ளார். 

உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள இஸ்கான் கோவில் மற்றும் குருகுலம் ஆகியவை இந்திய கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதாக பிரதமர் கூறினார். இந்தியாவைப் பொறுத்தவரை, நம்பிக்கை என்பது வைராக்கியம், உற்சாகம் மற்றும் மனிதநேயத்தில் நம்பிக்கை என்று கூறிய பிரதமர், அதை இஸ்கான் உலகிற்கு எடுத்துக் கூறியுள்ளது என்று தெரிவித்தார்.

இந்தியா யோகா, ஆயுர்வேதம் மற்றும் அறிவியலை உலகிற்கு வழங்கியது. மனிதாபிமானம், யோகா, ஆயுர்வேதம் மற்றும் அறிவியல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா உலகிற்கு கணிசமான பங்களிப்பை கொடுத்திருக்கிறது, இன்னமும் கொடுக்க முடியும் என்று இன்று பிரதமர் மோடி கூறினார் உலகமே இந்த நம்பிக்கையின் நன்மைகளைப் பெறுகிறது என்றும வர் கூறினார்.

தன்னிறைவு இந்தியா (AatmaNirbhar Bharat), பற்றி பேசிய பிரதமர் மோடி, நாம் வேறு எந்த நாட்டிற்கும், அங்குள்ள மக்களும் 'ஹரே கிருஷ்ணா' என்று கூறி எங்களை சந்திக்கும்போது, நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதே மிகப் பெரிய வெற்றி எனக் கூறினார். 

இஸ்கான் அமைப்பு, ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பிற வேத இலக்கியங்களை 89 மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வேத இலக்கியங்களை உலகம் முழுவதும் பரப்புவதில் இஸ்கான் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

READ ALSO | ஒரே நாளில் 1.2 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா புதிய சாதனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News