கொரோனா வைரஸ் தொற்றுக்கள் நாளுக்கு நாள் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அதிகரித்து வருகிறது. இந்த உயிர்கொல்லி வைரஸ் காரணமாக பலர் இறந்து வருகின்றனர். எனினும் இதுவரை இந்த வைரஸை விரட்டுவதற்கான மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
READ | உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவைப்படும் இந்த 3 பொருள்...
இருப்பினும், ஃபாவிபிராவிர்(Favipiravir) மருந்து மூலம் இந்த நோய்தொற்றுக்கு சிகிச்சை அளிக்க இருப்பதா தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுபோன்ற பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன, எனினும் கொரோனாவிற்கு தீர்வு எப்போது கிடைக்கும் என்ற உறுதியான தகவல்கள் இதுவரை இல்லை. இந்நிலையில், சமூக ஊடகங்களில் பகிரப்படும் கொரோனா குறித்த உறுதியில்லா தகவல்கள் மக்களின் பயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் குழப்பத்தையும் உருவாக்குகிறது.
கொரோனா சிகிச்சை குறித்து பல பதிவுகள் சமூக வலைப்பின்னல் தளங்களில் காணப்படுகின்றன, அதில் ஒன்று பூண்டு உட்கொள்ளுவதால் கொரோனாவின் விளைவை கட்டுப்படுத்தலாம் என்பதாகும்.
ஆனால் அது உண்மையில் இது கொரோனா நோயாளிகளுக்கு பலன் தருமா? உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லது. பூண்டு பயன்பாடு உடலுக்கு பல நோய்களை எதிர்த்துப் போராடும் திறனைக் கொடுக்கிறது, ஆனால் பூண்டு உட்கொள்வதன் மூலம் கொரோனா வைரஸை ஒழிக்க முடியும் என்பதற்கு வலுவான சான்றுகள் எதுவும் இல்லை. அதேவேளையில் பூண்டு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
READ | பூண்டு மற்றும் தேனை உட்கொள்வதால் ஆண்களுக்கு கிடைக்கும் அற்புதமான பயன்கள்...
பூண்டு பயன்படுத்தி கொரோனா வைரஸைத் தடுப்பது குறித்து இதுபோன்ற பதிவுகள் வைரலாகிய பின்னர் மக்கள் பூண்டை அதிகளவு உண்டு பல வகையான எதிர்வினைகளை பெற்றுள்ளனர். எந்த உத்தரவாதமும் இல்லாதபோது, பூண்டு அதிகமாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடாய் அமையும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இந்த பூண்டுகளை ஒரு குறிப்பிட்ட அளவு உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் நோய்களுக்கு எதிராக போராடும் சக்தியை உடலுக்கு அளிக்கிறது என்ற கருத்துக்கு மருத்துவ வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.