Health Alert! மதிய உணவில் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்!

எந்த நேரத்திலும் எந்த உணவையும் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எந்தவொரு உணவுப் பொருளையும் உட்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 23, 2022, 05:30 PM IST
Health Alert! மதிய உணவில் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்! title=

பெரும்பாலானோர் எந்த நேரத்திலும் எந்த உணவையும் சாப்பிடும் பழக்கம். இந்த நேரத்தில் இந்த உனவு தான் சாப்பிட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாமல் அலட்சியம் காட்டுகின்றனர். அவ்வாறு செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இந்த வகையில், மதியம் இரண்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

வீட்டில் இருந்து டிபன் எடுத்து வர வில்லை என்றால், பாஸ்ட் புட் சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருப்பதை பார்த்திருப்போம். அவ்வாறு செய்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல. பிட்சா, பர்கர், பாஸ்தா, சாண்ட்விச் போன்றவற்றை மதியம் மற்றும் மாலை வேளைகளுக்கான உணவு மெனுவில் இருந்து முற்றிலுமாக விலக்கி வைக்க வேண்டும். மதியம் முதல் மாலை வரை உணவில் துரித உணவுகளை வைக்கக் கூடாது என்று நிபுணர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்.

இதற்கான முக்கிய காரணம், இந்த உணவுகள் பசியை நீக்கினாலும், உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காது. இந்த உணவுப் பொருட்கள் உடலில் மந்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்துகின்றன. மேலும், சில துரித உணவுகள் பசியை ஆற்றாது. அதனால் அடிக்கடி சாப்பிட வேண்டியுள்ளது. இதன் காரணமாக உங்கள் வேலை பாதிக்கப்படுவதுடன் உடல் எடையும் கூடும். இப்போது மதியம் மற்றும் மாலைக்குள் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம்.

1. காய்கறி சூப்

சிலர் காய்கறி சூப் குடித்து விட்டாலே போதும் என இருக்கிறார்கள். வெஜிடபிள் சூப்பில் கலோரிகள் மிகக் குறைவு. இதில் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதில் புரதம் இல்லை. இதை உட்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் பசியை நிறுத்த முடியாது. பசி உணர்வு ஏற்படாமல் இருக்க புரதம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதை இங்கே அறிந்து கொள்வது அவசியம். அதனால் மதிய உணவில் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அப்படியே மதியம் சூப் குடித்தாலும் சிக்கன் சூப் சாப்பிடுங்கள். சிக்கன் சூப்பில் லீன் புரதம் உள்ளது. ஓட்ஸ், அரிசி, ஆப்பிள் அல்லது ரொட்டி ஆகியவற்றை சிக்கன் சூப்புடன் எடுத்துக் கொள்ளலாம். 

மேலும் படிக்க | இதய ஆரோக்கியம்: மாரடைப்பு அபாயத்தை நீக்கும் ‘சிறந்த’ உணவுகள்!

2. துரித உணவு

மதியம் மற்றும் மாலை நேரங்களில் துரித உணவுகளை சாப்பிடுவது மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. துரித உணவு உங்கள் பசி ஆற்றும் என்றாலும், அது சோம்பல் மற்றும் சோர்வை அதிகரிக்கிறது. ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டுவிட்டு மீண்டும் உங்கள் வேலையைத் தொடங்குவது, உங்களுக்கு சிரமமாகிவிடும். மறுபுறம், மாலையில் தூங்குவது ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.

3. பாஸ்தா

பாஸ்தா ஒரு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படவில்லை. மதிய உணவு மற்றும் மாலை உணவுகளில் பாஸ்தாவை சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஏனெனில் இதை சாப்பிட்டால் தூக்கம் அதிகம் வரும், வேலையும் பாதிக்கப்படும்.

4. கிரீன் ஜூஸ்

மதியம் மற்றும் மாலை நேரங்களில் காய்கறிகளின் ஜூஸ் அல்லது கிரீன் ஜூஸ் உட்கொண்டால் நல்லது என்று பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும், மதிய உணவிற்கு கிரீன் ஜூஸ் மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதனுடன் நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உள்ள உணவையும் சாப்பிட வேண்டும். மறுபுறம், நீங்கள் அதை மாலையில் உட்கொண்டால், உங்களுக்கு சளி பிடிக்கலாம்.

மேலும் படிக்க | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!

5. வறுத்த உணவு

வறுத்த உணவுகள் ஒருபோதும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுவதில்லை. பொரித்த உணவை வெளியில் சாப்பிடுவதும் கேடு. ஏனெனில் அது மீண்டும் மீண்டும் சூடு படுத்தப்பட்ட ட எண்ணையில் செய்யப்பட்டதாக இருக்கலாம்.அதனால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். மேலும், வறுத்த உணவுகளிலும் கலோரிகள் அதிகம். மதியம் மற்றும் மாலை வேளைகளில் இதை சாப்பிடுவதும் நல்ல தூக்கத்தை தருகிறது. பொரித்த உணவை சாப்பிட்டு நிம்மதியாக வேலை செய்ய முடியாது.

6. சாண்ட்விச்

சந்தையில் கிடைக்கும் முன்னரே தயாரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்படும் சாண்ட்விச்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடலில் சோம்பலை ஏற்படுத்துகிறது. இதில் ஏராளமான ப்ரிசர்வேட்டிவ்கள் மற்றும் சாஸ்கள் உள்ளதால், உடலில் மந்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, வேறு வழிகளிலும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன் தயவுசெய்து மருத்துவரை ஆலோசனை செய்யவும்.)

மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News