தொந்தியை குறைக்க எளிய பானம் இருக்கும்போது கவலை எதற்கு

ஒரு மாதத்தில் உடல் கொழுப்பை குறைத்து தொந்தியை கரைக்கும் மேஜிக் பானம் இது... தயாரிப்பதும் எளிது, செலவும் குறைவு...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 16, 2022, 02:01 PM IST
தொந்தியை குறைக்க எளிய பானம் இருக்கும்போது கவலை எதற்கு title=

உடல் பருமன், பானை வயிறு, பிள்ளையார் தொந்தி என உடலில் அதிகமாக இருக்கும் உங்கள் உடலின் அதிகப்படியான கொழுப்பை குறைக்கும் ஒரு பானம் இருக்கிறது என்றால் அது வரம் தானே?

அதிலும் இந்த கொழுப்பை குறைக்கும் பானம் வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்களாலேயே உங்கள் கையாலே தயாரித்து குடிக்கலாம் என்றால் அதைவிட மகிழ்ச்சியான விசயம் வேறு எதுவும் இருக்கமுடியாது.

ஜிம்முக்கு செலவழிக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சூப்பர் மேஜிக் செய்யும் பானம் இது.  

health
 
ஒரு மாதத்தில் கொழுப்பை குறைக்கும்
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பலரைப் பார்த்திருப்பீர்கள், அதில் சிலர் வொர்க்அவுட் அல்லது எடை குறைப்பு உணவு முறையை சரிவர பின்பற்றாவிட்டாலும் எடை குறைந்திருக்கும். அவர்கள் அதற்காக சில எளிய வீட்டு வைத்தியங்களை செய்திருப்பார்கள். அதில் முக்கியமான ஒன்று பானங்கள்

கொத்தமல்லி + சீரகம் + சோம்பு 

வறக் கொத்தமல்லி எனப்படும் கொத்துமல்லி விதைகள், சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கலாம். இந்த டிடாக்ஸ் பானம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.

இந்த பானத்தை தயாரிக்க, ஒரு ஸ்பூன் கொத்தமல்லி, சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இந்த மூன்றையும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் இந்த தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதித்ததும் வடிகட்டி, ஆறியதும் குடிக்கவும். இதனுடன் கருப்பு உப்பு அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். இவை இரண்டும் இந்த பானத்தின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க உதவும்.

health
சீரகத்தின் நன்மைகள்

சீரகம் பல பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

பொட்டாசியம், கால்சியம் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளதால், ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது.

சோம்பின் நன்மைகள்
கருஞ்சீரகம் சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குவது மட்டுமின்றி, உடலுக்குள் குளிர்ச்சி தரும் தன்மையையும் கொண்டுள்ளது. இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த வேலை செய்கிறது. இது மட்டுமல்லாமல், செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. பெருஞ்சீரகத்தில் உங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் உள்ளன, இது செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது.

health
கொத்தமல்லியின் நன்மைகள்
உடல் எடையை குறைப்பதில் கொத்தமல்லியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவுகிறது மற்றும் இது ஆன்டி-செப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றவும் கொத்தமல்லி உதவுகிறது. கொத்தமல்லி இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது கொத்தமல்லி.

இந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்
காலையில் இந்த பானத்தை குடிப்பது நல்ல பலனைத் தரும். இந்த பானத்துடன் சேர்த்து சமச்சீர் உணவுடன் உடற்பயிற்சிகளையும் செய்தால்,மிக வேகமாக உடல் எடையை குறைக்கலாம்.

மேலும் படிக்க | அசிடிட்டி தொல்லையில் இருந்து விடுதலை பெற இதோ டிப்ஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News