எல்லை பகுதியில் சீன போர் விமானங்கள், பீதியை மறைக்க வித்தை காட்டும் சீனா!

இந்திய எல்லை பகுதிக்கு அருகில் சீன போர் ஜெட் விமானங்கள் பறக்கின்றன. டிராகன் டோக்லாமை மறந்துவிட்டது போலும், இந்த முறை தக்க பதிலடி கொடுக்க இந்தியா உறுதியாக நிற்கிறது. சீனாவின் J -17 க்கு போர் விமானத்திற்கு கொடுக்க இந்தியாவின் பாகுபலியான சுகோய்-MKI  போர் விமானம்  தயாராகவே உள்ளது.

Updated: Jun 3, 2020, 06:47 AM IST
எல்லை பகுதியில் சீன போர் விமானங்கள், பீதியை மறைக்க வித்தை காட்டும் சீனா!

கொரோனா வைரஸை பரப்புவதன் மூலம் சீனா உலக நாடுகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திள்ளது. இப்போது அதன் போர் ஜெட் விமானங்கள் , லடாக் செக்டாரில்  LAC  அருகே பறக்கிறது. கிழக்கு லடாக் அருகே இவ்வாறு செய்வதன் மூலம், அது வெளிப்படையாக இந்தியாவை போருக்குத் தூண்டுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இது டிராகனின் போர்க்கப்பல் சர்க்கஸின் கிளைமேக்ஸ் தான். இதைவிட சீனாவால் வேறு எதுவும் செய்ய முடியாது.

கொரோனா பரவல் தொடர்பாக உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் தன்னை இன்றோ அல்லது நாளையோ நிச்சயம்  குறி வைக்கும் என  சீனா பயப்படுகிறது. அமெரிக்காவும் இந்தியாவும் அதற்கு எதிரான நடவடிக்கைக்கு தலைமை தாங்கப் போகின்றன என்பதை சீனா நன்கு அறியும். எனவே, அது போருக்குத் தயாராவதை போல வித்தை காட்டுகிறது.

READ | ஜி 7 உச்சிமாநாட்டை ஒத்திவைத்த டொனால்ட் டிரம்ப்; இந்தியாவை குழுவில் சேர்க்க வேண்டும்

இந்தியாவின் முப்படைகளும்  தங்கள் வலிமையைக் காட்ட தயாராகவே உள்ளன. சீனாவின் ஒரு தவறு, அதன் அழிவிற்கு வித்திடும் என்பது. இந்த முறை, சீனா யுத்தம் செய்ய நினைத்தால், இந்திய படை வீரர்கள் தங்கள் பழைய கணக்குகள் அனைத்தையும் தீர்த்து கொள்வர்கள்.

கிழக்கு லடாக்கில் LAC - யிலிருந்து 100 முதல் 150 கி.மீ தூரத்தில்,  சீனாவின் ஹோதான் மற்றும் குர்கன்ஸா என்ற இரண்டு விமான தளங்கள் உள்ளது. இதில் விமானப்படை நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

சுமார் 12 போர் விமானங்களை சீனா இங்கு நிறுத்தியுள்ளது. J -11 மற்றும் J -17 ரக போர் விமானங்கள்  இந்திய எல்லைக்கு அருகிலுள்ள பகுதியில் பறக்கின்றன. LAC - யிலிருந்து 30 முதல் 35 கி.மீ தூரத்தில் அவை காணப்படுகின்றன.

இது இந்தியாவுக்கு விடுக்கப்படும் நேரடி சவால்.  நாட்டின் மூப்படைகளும் சீனாவை எதிர் கொள்ள முழுமையாக தயாராக உள்ளன. சீனா எல்லை மீறினால், பதிலடி கிடைப்பது என்பது உறுதி.

கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீனா சாலை அமைக்க முயன்றது. அதை இந்திய வீரர்கள் உடனடியாக நிறுத்தினர். அதன் பிறகு இங்கு பதற்றம் தொடர்ந்து அதிகரித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் இதுவரை வெற்றிபெறவில்லை. ட்ரோன்களின் உதவியுடன் இந்தியா LAC பகுதியை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

இந்தியா, சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க, லடாக்கிலிருந்து அருகிலுள்ள விமான நிலையத்தில் இந்திய விமானப்படையின் சுகோய் MKI போர் விமானங்கள் தயாராக உள்ளன. சீன  விமானநிலையங்களை இந்தியாவால் நொடிப் பொழுதில் தகர்க்க முடியும்.

READ | ஒவ்வொரு உறவையும் உடைக்க முடியும்.. சீனாவை அச்சுறுத்தும் டிரம்ப்...

சீனா தனது J -17 போர் விமானத்tதை கொண்டு வந்து போர் சூழலை உருவாக்கியுள்ளது. அது சுகோய் விமானம் முன்னால் தாக்கு பிடிக்க முடியாது. சீனா  எல்லை மீறினால், அதன் ஆட்டம் உடனடியாக ஒடுக்கப்படும்.

ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை இந்தியா ரத்து செய்ததிலிருந்தே சீனா பதட்டமாக உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டபோது சீனாவின் பதற்றம் மேலும் அதிகரித்தது. கிழக்கு லடாக் பகுதியில், சீன ஆக்கிரமித்துள்ள இந்தியாவின் அக்சாய் சீன் பகுதியும் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த கில்கிட் பால்டிஸ்தான் இந்தியாவுடன் இணைந்தால், பின் அக்சாய் சீனை மீட்க இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்கும் என சீனா அஞ்சுகிறது. சீனாவின் திடீர் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் இது தான்.

ஜம்மு-காஷ்மீரின் 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அளவிலான அக்சாய் சின் பகுதியை சீனா ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளது. மேலும் 5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின்  ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு, 1963 இல் பாகிஸ்தானால் சீனாவிற்கு பரிசாக வழங்கப்பட்டது.பாகிஸ்தான் ஆக்கிரமித்த ஜம்மு-காஷ்மீரின் 13,000 சதுர கிலோமீட்டர் மற்றும் சீனா ஆக்கிரமித்துள்ள 43,000 சதுர கிலோமீட்டர் அளவிலான பகுதிகளை  பெற வேண்டும் என்பது இந்தியாவின் உறுதியான தீர்மானமாகும். இதனால் சீனாவுக்கு பதற்றம் மிகவும் அதிகரித்துள்ளது.

ஒருபுறம் டிராகன் போர் சூழலை உருவாக்குகிறது. மறுபுறம் LAC நிலைமை இயல்பாக  இருக்கிறது என்றும் கூறுகிறது. "இந்திய-சீனா எல்லையில் நிலைமை இயல்பாகவும்  கட்டுப்பாட்டிலும் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க இராஜீய ரீதியாக  இராணுவ நிலையில் பல வழிகள் திறக்கப்பட்டுள்ளன" என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

சீனா எப்படி பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது என்பதை புரிந்து முடியும். அது உலகின் கண்ணின் மண்ணை தூவ முயற்சிக்கிறது. சீனா 1962 ஆண்டு செய்த தந்திரத்தை செய்ய நினைக்கிறது. அப்போது சீனா ஒருபுறம் இந்தியாவும்-சீனாவும் சகோதரர் என்று கூறிவிட்டு  திடீரென்று இந்தியாவைத் தாக்கியது. அந்த துரோகத்தை இந்தியா இன்றுவரை மறக்கவில்லை. சீனாவில் அந்த தாக்குதலை இராணுவம் மறக்கவில்லை. போர் நிலைமை வந்தால், இந்த முறை 58  ஆண்டு கால முன் செய்த துரோகத்துக்காக, சீனாவை இராணுவம் நொடியில் பழிவாங்கும்.

சிக்கிம் முதல் அருணாச்சல பிரதேசம், லடாக் வரையிலான பகுதிகள் சீன இராணுவத்தின் வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டின்  கீழ் உள்ளன. இங்கே அது கடந்த இரண்டு ஆண்டுகளில் திபெத் முதல் ஹோதான் மற்றும் குர்கன்சா ஏர்பேஸ் வரை பல சூழ்ச்சிகளைச் செய்துள்ளது. சீனா தனது மிகவும் மேம்பட்ட போர் விமானத்தை திபெத்தில் நிறுத்தியுள்ளது.

READ | சீனாவுடனான எல்லை மோதலால் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை: டிரம்ப்!

இந்தியாவின் எல்லைக்கு அருகே சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.  இது குறித்து சீனாவிடம் கேள்வி எழுப்பியுள்ளது. நாங்கள் இந்தியாவுடன் இருக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வெளிப்படையாகவே கூறினார்.

வெளியுறவு கமிட்டித் தலைவர் எலியட் ஏங்கல், 'சர்வதேச சட்டத்தின் உதவியுடன் பிரச்சனையை தீர்ப்பதை விட, சீனா தனது அண்டை நாடுளை துன்புறுத்தும் வழியை தான் நம்புகிறது என்பதையே இது உறுதிபடுத்துகிறது' என்று கூறினார்.

கொரோனா  காரணமாக, சீனாவின் பொருளாதாரம் மோசமாக உள்ளது. ஆனால் சீனாவின் சர்வாதிகார அரசு அதன் உண்மை நிலையை உலகுகிற்கு அம்பலப்படுத்தாது. இதுபோன்ற நேரத்தில், பொருளாதாரத் தடைகள் முதல் இராணுவ நடவடிக்கை வரை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளின் பெரும் கூட்டணி அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதை  சீனா உணர்கிறது. எனவே LAC-யில் போர் விமானங்களை பறக்க விட்டு ஒரு நாடகம் நடத்துகிறது. ஆனால் டோக்லாம் விஷயத்தில் கண்ட தோல்வியை சீனா மறந்து விட்டது போலும்.  இந்தியாவின் தற்போதைய வலிமையை புரிந்து கொண்டு சீனா செயல்பட வேண்டும். இல்லாது, போர் தொடங்கினால், சீனாவின் பேரழிவு நிச்சயம்.

மொழியாக்கம் – வித்யா கோபாலகிருஷ்ணன்