Omicron: ஒமிக்ரான் புதிய கட்டுப்பாடுகள்? பிரதமர் மோடி இன்று ஆலோசனை

நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 23, 2021, 08:42 AM IST
Omicron: ஒமிக்ரான் புதிய கட்டுப்பாடுகள்? பிரதமர் மோடி இன்று ஆலோசனை title=

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் தொற்று 85 -க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 7 மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 226 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு 50-ஐக் கடந்துள்ளது.

ALSO READ  |Omicron: தில்லியில் கிரிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுபாடுகள்..!!

இதனால், கடுமையான கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி ஒமிக்ரான் பாதிப்பு குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஒமிக்ரான் பாதிப்பு நிலவரம், கட்டுப்பாடுகள், மருந்துகள் இருப்பு குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டறியும் அவர், மருத்துவத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதில், எந்தெந்தமாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும், பாதிப்பின் தீவிரம் குறித்து அவர்களிடம் கேட்டறிகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசு மாநில அரசுளை ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதற்கட்டமாக சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். பாதிப்பின் தீவிரத்துக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அதிகரித்த திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதால், அதுகுறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ | இந்தியாவில் 200ஐ தாண்டிய Omicron பாதிப்பு; அமலாகப்போகிறது Night Curfew

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News