Mumbai Aircraft Accident: விசாகப்பட்டினத்திலிருந்து மும்பை செல்லும் தனியார் விமானம் வியாழக்கிழமை மாலை மும்பை விமான நிலையத்தில் (Mumbai Airport) ஓடுபாதை எண் 27 இல் தரையிறங்கும் போது ஓடுபாதையிலிருந்து வழுக்கி விலகி (veer off) சென்றது. செய்தி நிறுவனமான ANI வெளியிட்டுள்ள செய்தியில், விசாகப்பட்டினத்திலிருந்து மும்பைக்கு VSR வென்ச்சர்ஸ் நிறுவனத்தினால் இயக்கப்படும் லியர்ஜெட் 45 விமானம் VT-DBL (SR Ventures Learjet 45 aircraft VT-DBL) ஓடுபாதையில் இருந்து வழுக்கி சென்று விபத்திற்குள்ளானது. கன மழை காரணமாக தெரிவு நிலையும் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் ஆறு பயணிகளும் இரண்டு விமான குழுவினரும் இருந்தனர். எனினும், இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (DGCA) அறிவித்துள்ளது.
“VSR வென்ச்சர்ஸ் லியர்ஜெட் 45 விமானம் VT-DBL வைசாக்கில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் விமானம் மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதை 27 இல் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து வழுக்கி விலகி சென்றது. விமானத்தில் 6 பயணிகளும் 2 விமான பணியாளர்களும் இருந்தனர். கனமழையுடன் 700 மீட்டர் தொலைவில் தெரிவுநிலை காணப்பட்டது” என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
VSR Ventures Learjet 45 aircraft VT-DBL operating flight from Visakhapatnam to Mumbai was involved in runway excursion (veer off) while landing on runway 27 at Mumbai airport. There were 6 passengers and 2 crew members on board. Visibility was 700m with heavy rain. No casualties…
— ANI (@ANI) September 14, 2023
#WATCH | VSR Ventures Learjet 45 aircraft VT-DBL operating flight from Visakhapatnam to Mumbai was involved in runway excursion (veer off) while landing on runway 27 at Mumbai airport. There were 6 passengers and 2 crew members on board. Visibility was 700m with heavy rain. No… pic.twitter.com/KxwNZrcmO5
— ANI (@ANI) September 14, 2023
மேலும் படிக்க | நடு வானில் பரபரப்பு... பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசாமி!
சமீபத்திய விமான விபத்துக்கள்
நேற்று, விமானத்தின் காக்பிட்டில் திடீர் புகை ஏற்பட்டதன் காரணமாக அவசர அவசரமாக எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு சென்று கொண்டிருந்த எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானத்தின் காக்பிட்-இல் திடீரென புகை வந்ததால் தரையிறக்கப்பட்டது. அவசரமாக தரையிறங்கியது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, புகை ஏற்பட்டதாகவும், அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக, அதில் பயணம் செய்த பயணி ஒருவர் தெரிவித்தார்.
இரு நாட்களுக்கு முன்னதாக, ரஷ்யாவின் சோச்சி நகரில் இருந்து யூரல் ஏர்லைன்சின் 'ஏர்பஸ் ஏ320 ' விமானம் சைபீரியாவின் ஓம்ஸ்க் நகருக்கு புறப்பட்டநிலையில், விமானம் ஓம்ஸ்க் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தில் 159 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் இருந்தனர். இதனை அடுத்து நோவோசிபிர்ஸ்க் நகரில் உள்ள வயலில் விமானத்தை சாமர்த்தியமாகவும், பாத்திரமாகவும் விமானிகள் தரையிறக்கினர். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும் படிக்க | நடுவானில் நின்று போன குழந்தையின் மூச்சு... உயிரைக் காப்பாற்றிய AIIMS மருத்துவர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ