அது முறையான ஆவணம் அல்ல.. இனி ஆதார் அட்டை இதற்கு பயன்படாது -உச்சநீதிமன்றம் அதிரடி

Aadhaar Card Latest News In Tamil: ஆதார் அட்டை பிறந்த தேதிக்கான அதிகாரப்பூர்வ ஆதாரமாக பயன்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த முக்கியமான இன்ஃபர்மேஷன் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 25, 2024, 04:01 PM IST
அது முறையான ஆவணம் அல்ல.. இனி ஆதார் அட்டை இதற்கு பயன்படாது -உச்சநீதிமன்றம் அதிரடி title=

Supreme Court Verdict About Aadhaar Card: இந்தியாவை பொறுத்தவரை ஆதார் கார்டு முக்கிய டாக்குமெண்ட்டா இருந்து வருகிறது. அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. எந்தவொரு திட்டத்தை எடுத்துக்கொண்டாலும் ஆதார் ஆட்டை அவசியம். ஆனால் எந்தவொரு நபரின் வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை சரியான ஆவணம் அல்ல என்றும், அதற்கு மாறாக பள்ளி சான்றிதழ்படி தான் வயதை தீர்மானிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சாலை விபத்தில் உயிரிழந்தவரின் பள்ளி சான்றிதழில் இருக்கும் பிறந்த தேதியின் அடிப்படையில் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

ஆனால், மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

காப்பீட்டு நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சாலை விபத்தில் உயிரிழந்தவரின் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதின் அடிப்படையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அதாவது முன்னதாக மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில், இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.19 லட்சத்து 35 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அதேநேரம் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், இழப்பீட்டு தொகையை ரூ.9 லட்சத்து 22 ஆயிரமாக குறைத்து வழங்க உத்தரவிட்டது.

இழப்பீட்டைக் குறைத்து தீர்ப்பளித்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, இறந்தவரின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜால் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 

இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்ய பள்ளி சான்றிதழின் அடிப்படையில் இறந்தவரின் வயதை நிர்ணயிக்கும் மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயத்தின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.

டிசம்பர் 20, 2018 அன்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில், 2023 ஆம் ஆண்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் அட்டையைப் அடையாள ஆவணமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், பிறந்த தேதிக்கான ஆதாரமாக அதை பயன்படுத்தக்கூடாது எனக் கூறியிருப்பதை உச்ச நீதிமன்றம் மேற்கோள் காட்டியது.

மேலும் சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 இன் பிரிவு 94 இன் துணைப்பிரிவு (2)-ல் பள்ளி சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி அடிப்படையில்தான் வயது தீர்மானிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளதையும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில்கூறியது.

இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம், ஆனால் ஒருவரின் வயதை தீர்மானிக்கும் ஆவணமாக கருதக்கூடாது என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க - ஆதார் இணைத்தால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கும் - எப்படி?

மேலும் படிக்க - NPS உறுப்பினர்களுக்கு குட் நியுஸ்: வருகிறது என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு... இனி வசதிகள் அதிகரிக்கும்

மேலும் படிக்க - சூப்பர் செய்தி! ரேஷன் கடைகளில் ஆதார் அட்டை மூலம் பணம் எடுக்கலாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News