Money Matters: 142 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இந்த பீரோ யாருடையது?

வருமான வரித் துறை மேற்கொண்ட ரெய்டில் கட்டுக் கட்டான பெரும் தொகை கைப்பற்றப்பட்டது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 12, 2021, 12:16 AM IST
  • கணக்கில் காட்டப்படாத பணம் கட்டுக்கட்டாய் பீரோவில்!
  • 142 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இந்த பீரோ யாருடையது?
  • டிவிட்டரில் வைரலாகும் அலமாரி
Money Matters: 142 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இந்த பீரோ யாருடையது? title=

இந்த சாதாரண இரும்பு பீரோவில் உள்ளது உங்களால் எண்ணிக் கூட பார்க்க முடியுமா என்று மலைக்க வைக்கும் கட்டுக் கட்டான பணம். கதவைத் திறந்தால் விழுந்துவிடும் என்று நினைக்கும் அளவுக்கு பணம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

வருமான வரித் துறை மேற்கொண்ட ரெய்டில் இந்த பெரும் தொகை கைப்பற்றப்பட்டது. மருந்து குழு இடைத்தரகர்கள், செயலில் உள்ள மருந்து பொருட்கள் (Active Pharmaceutical Ingredients) மற்றும் சூத்திரங்கள் (formulations) தயாரிப்பதில் ஈடுபடுவதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

கணக்கில் வராத 550 கோடி ரூபாய் ரொக்கப் பணம் இருப்பதாக கடந்த புதன்கிழமை (அக்டோபர் 6) நடத்திய அதிரடி தொடர் சோதனைகளில் வருமான வரித்துறை கண்டறிந்தது. இந்த ரெய்டுகளில் ஹைதராபாத்தை சேர்ந்த மிகப்பெரிய மருந்து நிறுவனத்திடமிருந்து 142.87 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது.

வருமான வரித் துறை அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், மருந்து குழு இடைத்தரகர்கள், செயலில் உள்ள மருந்து பொருட்கள் (Active Pharmaceutical Ingredients) மற்றும் சூத்திரங்கள் (formulations) தயாரிப்பதில் ஈடுபடுவதாக வருமான வரித்துறை தெரிவித்தது இந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவை அமெரிக்கா, ஐரோப்பா, துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வருமான வரித்துறை ரெய்டின் ஒரு படம் சமூக வலைதளங்கள் முழுவதும் வைரலாகி வருகிறது, குறிப்பாக மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில், பணம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த பீரோவின் புகைப்படம் வைரலாகிறது.

வருமான ஏய்ப்பு செய்ததான சந்தேகத்தில் எங்கு ரெய்டு நடத்தப்பட்டது என்ற மருந்து நிறுவனத்தின் பெயரை வருமான வரித்துறை குறிப்பிடவில்லை. கோவிட் -19 சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரெவிடிசிவிர் ஊசி, கோவிஃபோர் (Remdesivir injection, Covifor) என்ற கொரோனாவுக்கான முதல் மருந்தை  இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஹெடெரோ டிரக்ஸ் (Hetero Drugs) என்ற மருந்து நிறுவனத்தில் சோதனை நடந்ததாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

READ ALSO | கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 44444444.44 ரூபாய் மதிப்புள்ள பணமாலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News