கூகுள் உங்களுக்கு பல விதங்களில் பயன் தரக்கூடியதாக இருந்தாலும் சில சமயங்களில் உங்களது மன தைரியத்தை குழைத்துவிடும். சளி போன்ற சில நோய்கள் குறித்து நீங்கள் கூகுளில் ஆய்வு செய்யும்போது அது உங்களுக்கு சில சமயங்களில் தவறான செய்திகளை வழங்கி உங்களை பயமுறுத்தி விடுகிறது. இதுகுறித்து நாம் கூகுளில் தேடும்போது, இது மிகவும் தீவிரமான நோய், இது சில மணிநேரங்களில் உங்களைக் கொன்றுவிடும் என்பது போன்ற செய்திகளை காண்பிக்கிறது. வெடிகுண்டு தயாரிப்பது போன்ற சட்டவிரோத செயல்களை கூகுளில் தேடுவது உங்களுக்கு பாதகத்தை விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 2013-ல், ஒருவர் "பேக்பேக்" மற்றும் "பிரஷர் குக்கர்" ஆகியவற்றை கூகிள் செய்த சில மணி நேரங்களில் அவரது வீட்டு கதவை போலீசார் தட்டியது குறிப்பிடத்தக்கது. ஒருபோதும் கூகுளில் நீங்கள் மூட்டை பூச்சிகள் பற்றி மட்டும் கூகுள் செய்துவிடாதீர்கள், அப்படி மட்டும் செய்தீர்கள் என்றால் உங்கள் மெத்தையையே நீங்கள் தூக்கி வீசிவிடுவீர்கள்.
மேலும் படிக்க | Toll Tax: சுங்கவரி விதியில் முக்கிய மாற்றம்... இனி பணம் வசூலிக்கப்படாது!
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் உங்களுக்கு இருக்கும் பிரச்சனை பற்றி நீங்கள் கூகுளில் தேடினால் பல திகிலான அனுபவத்தை நீங்கள் அனுபவிக்க நேரிடும். சில சமயம் இந்த உணவுப்பொருளை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் என்று செய்திகள் இணையத்தில் உலாவும், இந்த இணைப்பை நீங்கள் பார்க்கும்போது நீங்கள் மனதளவில் பாதிக்கப்படுவீர்கள். சிலந்திகள் என்றால் அனைவர்க்கும் ஒருவித பயம் இருக்கும் தான், அதற்காக சிலந்திகளை பற்றி நீங்கள் கூகுளில் தேடாதீர்கள். அப்படி சிலந்திகளை பற்றி தேடினால் அதில் வரும் செய்திகள் உங்களுக்கு அராக்னோபோபியாவை ஏற்படுத்திவிடும். ப்ளூ வேஃபிள் சாப்பிட்டால் பாலியல் ரீதியான நோய்த்தொற்று ஏற்படும் என்று போலியான செய்திகள் பரவியது. இது பெண்களின் பிறப்புறுப்பை பாதிப்பதாக போலி செய்திகள் பரவியது என்பதால் உணவுப்பொருட்களை பற்றி வரும் வதந்திகளை நீங்கள் நம்பவேண்டாம்.
கூகுளில் சர்வதேச வர்த்தகம் குறித்த செய்திகளை தேட வேண்டாம், பங்குகளை வாங்கும் முன் வர்த்தகம் பற்றிய தேடலை மேற்கொண்ட ஒரு நபரை போலீசார் கைது செய்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. கூகுளில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகளை பார்த்து சுயமாக பிரசவம் பார்ப்பது என்பது மிகவும் தவறான ஒரு செயலாகும், இதை ஒருபோதும் யாரும் செய்யக்கூடாது. சில சமயம் நாம் பல இணையதளங்களில் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை இணைத்திருப்போம், நம்முடைய மின்னஞ்சல் முகவரி கசிந்துள்ளதா என்பதை கூகுளில் தேட முயற்சிக்க வேண்டாம்.
மேலும் படிக்க | Flirt செய்வது ஒரு கலை... அதனை முறையாக செய்ய 10 டிப்ஸ்கள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ