இன்றைய நவீன காலகட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் எந்தளவுக்கு நமக்கு உதவிகரமாக இருக்கின்றதோ அதைவிட அதிகளவில் நமக்கு பாதகமும் ஏற்படுகிறது. இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ஸ்மார்ட்போன்கள் தான் ராஜ்யம் செய்து வருகிறது, குறைந்தது ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. ஒரே தட்டலில் உலகத்தையே உள்ளங்கைக்குள் கொண்டுவர நினைத்து ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த ஆர்மபித்த நாம் இப்போது ஸ்மார்ட்போனின் உள்ளங்கைக்குள் சென்றுவிட்டோம் என்பது மறுக்கமுடியாத உண்மை. பெரும்பாலும் குழந்தைகள் தான் ஸ்மார்ட்போனிற்குள் மூழ்கி அடிமையாகி கிடக்கின்றனர், அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க இங்கே கூறப்பட்டுள்ள சில வழிகளை பின்பற்றலாம்.
குழந்தைகள் மொபைல்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினம், ஆனால் பொழுதுபோக்குக்காக பயன்படுத்துபவர்கள் அல்லது அதற்கு அடிமையாகி கிடப்பவர்கள் என கண்டறிவது எளிது. மொபைல் அல்லது டேப்லெட் இல்லாமல் இருந்தால் உங்கள் குழந்தைக்கு கோபம் வருகிறதா என்பதை கவனியுங்கள், அப்படி இருந்தால் அவர்கள் அதற்கு அடிமையாகி விட்டார்கள் என்று அர்த்தம். உங்கள் குழந்தை ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு இருக்கும், அதற்காக அவர்களுக்கு கடுமையான விதிகளை விதிக்காதீர்கள் அதற்கு பதிலாக ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்தினால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை பொறுமையாக எடுத்து சொல்லுங்கள். உங்கள் குழந்தை ஸ்மார்ட்போனை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்கிற தினசரி வரம்பை அமைக்கவும்.
மேலும் படிக்க: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்
18 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இந்த திரையில் காட்டாமல் இருப்பது நல்லது, 18-24 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளை பெற்றோர் கண்காணிப்பின் கீழ் மொபைலை பார்க்க செய்யலாம். 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் மொபைலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் தகுந்த கால வரம்பை தீர்மானிக்கலாம். உங்கள் குழந்தையின் படுக்கையறையில் தூங்க செல்லும்போது அங்கு மொபைல் இருப்பதை தவிர்த்துவிடுங்கள், இது அவர்களின் தூக்கத்தை கெடுக்கும். இரவு நேரங்களில் அதிகமாக ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல, இது உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கும்.
திரை நேரத்தை தவிர்க்க உங்கள் குழந்தையை வெளியில் விளையாட அனுமதிப்பது அல்லது பிற உடல் செயல்பாடுகளைச் செய்ய தூண்டுவது போன்றவற்றை செய்யவேண்டும். ஒரு வாரம் மொபைல் அல்லது டேப்லெட் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து அந்த நாட்களில் உங்கள் குழந்தையை பல்வேறு ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வைக்கவேண்டும். உங்கள் குழந்தையை கண்டிப்பதற்கு முன்னர் நீங்கள் அவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு முன்னர் நீங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த காய்கறிகளே உடல்நலனுக்கு எதிராகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ